தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்

கண்ணோட்டம்

தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் ஆனது, குறிப்பிட்ட நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்காக குறைந்த பட்ச அடிப்படை ஊதியத்தில் வேலைவாய்ப்புகளை அளித்திடும் ஒரு மாதிரி திட்டமாக 2021ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது.  இத்திட்டத்தின் மீதான ஒரு மதிப்பாய்வு மாநிலத் திட்டக்குழுவால் பிப்ரவரி 2023ல் மேற்கொள்ளப்பட்டது.  இந்த மதிப்பாய்வு, சென்னை பெருநகரத்தில் உள்ள இரண்டு மண்டலங்கள், கோயம்புத்தூர் மாநகராட்சில் ஒரு மண்டலம், திருநெல்வேலி மாநகராட்சியில் ஒரு மண்டலம், நான்கு நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகள் உள்ளடக்கியது.  இந்த மதிப்பீட்டாய்வின் நோக்கம் யாதெனில், இத்திட்டத்தின் நேரடி களத்தாக்கத்தை கண்டறிதல், இத்திட்டத்தின் செயலாக்கத்தின் பல்வேறு கூறுகளை அறிதல், இத்திட்டத்தின் வடிவமைப்பில் தேவைப்படும் இடைவெளிகளை போக்குதல், இவற்றுடன் இத்திட்டத்தை பெருமளவில் விரிவாக்கம் செய்வது எனும் பரந்த இலக்கு ஆகியன ஆகும்.

ஆய்வின் மூலம் தெரியவரும் முக்கிய தெளிவுகள்

  1. நகர்ப்புற பகுதிகளில் வறுமை ஒழிப்பிலும் மற்றும் பல்வேறு சமுதாயங்களை ஒன்றிணைப்பதிலும் இத்திட்டம் மிக முக்கிய பங்காற்றுகிறது என்பது உறுதி செய்யப்படுகிறது.  இத்திட்டத்தின் கணிசமான தேவைப்பாடு, இதனை மாநிலத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளிலும் விரிவு படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
  2. மிகக் குறிப்பாக, இத்திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்களில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்பது, மகளிர் வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்படுதலை இத்திட்டத்தின் தாக்கமாக தெளிவுறுகிறது.
ஆய்வறிக்கை