மாநில திட்டக்குழு தமிழக அரசின் உயர்மட்ட ஆலோசனைக் குழுவாக இருப்பதுடன், அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்களின் புதுமையை புகுத்துதலிலும், பொது சேவை வழங்குதலின் தரத்திலும் , விரைவு தன்மையிலும் புதுமைகளை புகுத்தி, மேம்பட்ட சேவைகளை மக்களுக்கு வழங்கும் சீரிய நோக்குடன் 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், தமிழக அரசின் பல்வேறு அரசு துறைகள் மற்றும் அரசு சார் துறைகளின் சுமார் 400 புதுமையான முயற்சிகளுக்கு, தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கிட பரிந்துரை செய்துள்ளது.
அரசின் துறைகளின் மற்றும் மாவட்ட நிருவாகத்தில் புதுமைகளை ஊக்குவிக்க ஆளூகைக்கான புத்தாக்க மையம் ஏற்படுத்தப்பட உள்ளது. இம்மையமானது அரசு துறைகளில் காணப்படும் சவால்கள் மற்றும் இடர்பாடுகளைக் களைய புதுமையான திட்டங்களை கண்டறிந்து பொது சேவை அளிக்க உறுதுணையாக செயல்படும்.