மற்றும் திட்டமிடல்
குழுமம்
வேளாண் கொள்கை மற்றும் திட்டமிடல் குழுமம்
முக்கிய செயல்பாடுகள்
இக்குழுமத்தின் முக்கிய நோக்கம் வேளாண்மை வளர்ச்சிக்காக இத்துறை சார்ந்த துறைகளுடன் ஒருங்கிணைந்து விரிவான கொள்கைகள் வடிவமைத்தல் மற்றும் ஆலோசனை வழங்குவதல்.
மேலும், இக்குழுமம் பின்வரும் துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, அரசுக்கு ஆலோசனை மற்றும் கொள்கைகளை பரிந்துரைக்கிறது, அவை விவசாயம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், கூட்டுறவு, நுகர்பொருள் விநியோகம் (ம) நுகர்வோர் பாதுகாப்பு, நீர்வள ஆதாரத் துறை மற்றும் பொதுப்பணித் துறை.
துறைசார் கலந்தாய்வு கூட்டங்கள்
வேளாண் துறைகளை ஒருங்கிணைத்து, பின்வரும் நோக்கங்களுக்காக கலந்தாய்வு கூட்டங்களை நடத்துகிறது, மாநில மற்றும் மத்திய அரசின் வேளாண் திட்டங்களை செயல்படுத்துதல் குறித்த ஆய்வு மேற்கொள்ளுதல், சிறந்த நடைமுறைகளை மற்ற துறைகளுக்கு பகிர்தல், துறைசார் பிரச்சினைகள் மற்றும் சவால்களை அடையாளம் காணுதல், முன்னேற்றத்திற்கான யுத்திகள்/வழிமுறைகளை வரையறுத்தல்.
இப்பொருள் தொடர்பாக திட்டக் குழு உறுப்பினர்களால் வழங்கப்படும் மதிப்புமிக்க ஆலோசனைகள் மற்றும் துறைகளுக்கான சிறந்த நடைமுறைகளை அரசின் பார்வைக்கும் பரிசீலனைக்கும் சமர்ப்பிக்கப்படுகின்றன.
ஆராய்ச்சி மற்றும் அறிவுசார் தகவல் பகிர்வு
ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் மாநிலத் திட்டக் குழு இணைந்து ஆராய்ச்சி ஆய்வுகள் மேற்கொள்கிறது. இவ்வாய்வுகள் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் பல்வேறு கொள்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களின் தாக்கம் போன்ற வளர்ந்து வரும் பிரச்சனைகளை ஆய்வு செய்கின்றன. களத்தில் உள்ள முக்கிய பங்குதாரர்கள் மற்றும் நிபுணர்களை ஒன்றிணைத்து பட்டறை மற்றும் பயிலரங்களை ஏற்பாடு செய்யப்படுகிறது.
துறைகள்
இக்குழுமம், கீழ்க்கண்ட தலைமைச் செயலகத் துறைகள் மற்றும் துறைத் தலைமையகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது :
வேளாண்மை - உழவர் நலத் துறை
- வேளாண்மை இயக்ககம் (ம) உழவர் நலத் துறை
- தோட்டக்கலை-மலைப்பயிர்கள் இயக்ககம்
- வேளாண்மை விற்பனை – வேளாண் வணிக இயக்ககம்
- வேளாண்மைப் பொறியியல் துறை
- விதை சான்றளிப்பு மற்றும் அங்ககச் சான்றளிப்பு இயக்ககம்
- சர்க்கரை துறை
- தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்
கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
- கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை மருத்துவ சேவைகள் இயக்ககம்
- மீன்வளம், மீனவர் நலம் இயக்குநரகம்
- பால் உற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை ஆணையரகம்
- தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
- தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்
கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை
- உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை
- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
- கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம்
- தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம்
பொதுப்பணி துறை
- பொதுப்பணி துறை
நீர்வளத்துறை
- நீர்வளத்துறை
துறைசார் இதர நிறுவனங்கள்
- வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி (NABARD)
- வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA)
- கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (MPEDA)
- கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையம் (CAA)
- எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை (MSSRF)
மதிப்பீடுகள் & ஆய்வுகள்
Rural Development
Sustainable Farming
Livestock Management
Veterinary Science
Agricultural Innovation
Water Management
தமிழ்நாட்டில் மருத்துவத் தாவரங்கள் மற்றும் பைட்டோ மருந்துகளின் ஏற்றுமதியின் நிலை மற்றும் நோக்கம் குறித்த ஆய்வு (SPC)
உலகளாவிய வர்த்தக போக்குகளை மதிப்பிடுதல், தமிழ்நாட்டின் சாகுபடி நிலை குறித்த நிலப்பரப்பு பகுப்பாய்வு நடத்துதல், ஏற்றுமதி திறனை மதிப்பீடு செய்தல் மற்றும் மருத்துவ தாவர சாகுபடியில் அரசாங்கத் திட்டங்களின் தாக்கத்தை ஆய்வு செய்தல் உள்ளிட்ட விரிவான நோக்கங்களை மருத்துவத் தாவரங்கள் குறித்த இவ்வாய்வு கொண்டுள்ளது. Read More
கோழிப்பண்ணை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் தொழில்முனைவோரை ஊக்குவித்தலில் பொருளாதாரத் தாக்கம்
மேம்பாட்டுத் திட்டம், அதன் செயல்திறனை மதிப்பீடு செய்வதையும், பயனாளிகள் மீதான அதன் தாக்கத்தை மதிப்பிடுவதையும் நோக்கமாகக் கொண்டது. இத்திட்டத்தின் நோக்கங்களில் வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துதல், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் கிராமப்புறங்களில் சிறு தொழில்முனைவோரை உருவாக்குதல் ஆகியவை அடங்கும். Read More
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பின்தங்கிய வட்டாரங்களில் குறைந்த செலவில் மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட செயற்கை கருவூட்டல் (Progesterone implant) மூலம் எருமைகளில் கருவுறுதல் மற்றும் இனப்பெருக்க திறனை அதிகரிப்பது குறித்த மதிப்பீட்டு ஆய்வு குறித்த அறிக்கை
மாநில சமசீர் நிதி திட்ட நிதியுதவியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பின்தங்கிய வட்டாரங்களில் குறைந்த செலவிலான எருமை செயற்கை கருவூட்டல் மற்றும் இனபெருக்கம் குறித்து இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. செயற்கை கருவூட்டல் மூலம் எருமை இனபெருக்கம், எருமையில் கன்று ஈனும் கால Read More
வேளாண்மை மேம்பாட்டுக்கான பணிக்குழு அறிக்கை
இவ்வாய்வு மாநிலத்தில் வேளாண் மேம்பாட்டிற்கான காரணிகளை எடுத்துரைப்பதுடன் இடுபொருள் மற்றம் வள மேம்பாட்டிலுள்ள பிரச்சினைகள், திட்டங்கள், பரிந்துரைகள் மற்றும் புத்தாக்கங்கள், மானாவாரி உற்பத்திதிறன், சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தகம், விவசாயத்தில் புதியRead More
பண்ணை வருமானத்தை அதிகரிப்பது மற்றும் தண்ணீரைப் பாதுகாப்பது ஆகிய இரட்டை நோக்கங்களை பூர்த்தி செய்வதற்கான சாத்தியமான உத்தியாக குறைந்த நீர் பாசனத்தில் வளரும் பயிர்களைக் கொண்ட தோட்டக்கலைத் தொழிலை ஊக்குவிக்கவும் இது பரிந்துரைக்கிறது. விவசாயத்தில் இயந்திரமயமாக்கலையும் இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது. விவசாயத் துறையில் தற்போதுள்ள திட்டங்களை இந்த அறிக்கை பகுப்பாய்வு செய்கிறது.
சிறுதானியங்களின் ஊட்டச்சத்து கலவை மற்றும் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டலின் போது ஏற்படும் இழப்பைக் குறைப்பதற்கான வழிகள் பற்றிய ஆய்வு
தயாரிப்பு மேம்பாட்டிற்கான இரும்பு மற்றும் ஊட்டச்சத்து உள்ளடக்கிய மேம்பட்ட வகையான சிறுதானியங்ளின் தயாரிப்புகள் குறித்து இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் சிறுதானிய விவசாயிகளின் சவால்களை எடுத்துரைக்கிறது. சிறுதானிய அறுவடை மற்றும் கதிர் உலர்த்தல் இவ்வாய்வு குறிப்பிடுகிறது. Read More
விவசாயத்தில் மோசமான பருவமழையின் தாக்கத்தை குறைப்பதற்கான உத்திகள்
வோளாண்மையில் பருவமழை பொய்த்த போது ஏற்படும் பாதக விளைவுகளை இவ்வாய்வு எடுத்துரைக்கிறது. பயிரிடும் முறை, நீர் வளம் பாதுகாத்தல், விவசாயம் அல்லாத இதர வருவாய், மற்றும் வறட்சியின் தாக்கத்தை தணித்தல் போன்றவைகளில் புதிய உத்திகளின் அவசியத்தை இவ்வாய்வு வலியுத்துகிறது. Read More
தமிழ்நாட்டில் தற்போது நடப்பிலுள்ள முக்கிய கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் திட்டங்களின் மதிப்பீடு
கால்நடைத் துறையின் உயர் வளர்ச்சி திறன் குறித்து மதிப்பீடு மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை இவ்வாய்வு வலியுறுத்துகிறது. இரண்டாம் நிலை தரவுக்காக பகுப்பாய்வு கொண்டு, கடந்த காலம் மற்றும் தற்போது திட்டத்தின் செயல்திறனை நிலையை மதிப்பாய்வு செய்வதை இவ்வாய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிக்கோள்களில் இடைவெளிகளைக் கண்டறிதல். Read More
சேலம் மாவட்ட விவசாயிகளின் உற்பத்தித்திறன், உற்பத்தி மற்றும் வருமானத்தை மேம்படுத்துவதில் கூட்டு வேளாண்மையின் தாக்கம் குறித்த ஆய்வு
மேம்பட்ட விவசாய நடைமுறைகள் மற்றும் செலவு குறைந்த தொழில்நுட்பங்கள் பகிர்வதற்காக சிறு மற்றும் குறு விவசாயிகள் உள்ளடக்கிய விவசாய உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்குவதல், உற்பத்தித்திறனை மேம்படுத்துல், சமூக மூலதன மேம்பாடு, மனித வள மேம்பாடு, விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளைப் பதிவு செய்வதற்கான நிதி உதவி வழங்குதல், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் Read More
மாநில வருவாயில் சார்பு துறைகளின் திறன் மற்றும் பங்களிப்பை மதிப்பீடு செய்தல்
இவ்வாய்வானது தமிழ்நாட்டின் விவசாயத்தின் செயல்திறனை மதிப்பீடு செய்வதாகும். பொருளாதாரத்தின் மற்ற துறைகளுடன் ஒப்பிடுகையில் வேளாண் துறையில் இருந்து மொத்த மற்றும் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. வேளாண் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தானியங்களின் (முக்கியமாக நெல் மற்றும் மக்காச்சோளம்) பங்களிப்பு Read More
தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தித் திறனை மதிப்பீடு செய்தல்
பயிரிடுதல், மகசூல், வள பயன்பாடு மற்றும் விவசாயிகளின் நிகர இலாபம் போன்ற காரணிகளில் கவனம் செலுத்தி, தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தித்திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் அரிசி தீவிரப்படுத்தும் முறையின் (S.R.I.) தாக்கத்தை இவ்வாய்வு மதிப்பீடு செய்தது. மாநிலம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் விளைச்சல் மற்றும் வள பயன்பாட்டில் Read More
புன்செய் நிலங்களில் முக்கிய மானாவாரி பயிர் விளைச்சலை அதிகரிப்பதற்கான திட்டங்கள் மதிப்பீடு செய்தல்
முக்கிய மானாவாரி பயிர் உற்பத்தி திட்டங்கள் புன்செய் நில விவசாயத்தை அதிகரிப்பதற்கான திட்டங்களை மதிப்பீடு செய்தலே இவ்வாய்வின் நோக்கமாகும். விவசாயத் துறையில் வளர்ச்சித் திட்டங்களைத் திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும் மதிப்பீடு முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலை Read More
தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தின் மதிப்பீடு
தோட்டக்கலை பயிர்கள் ஏனைய பயிர்களுடன் ஒப்பிடும்போது விவசாயிகளுக்கு வருமான அதிகரிப்புக்கான வாய்ப்பை வழங்குகின்றன. ஆனால் தோட்டக்கலை பயிர்கள் அழுகக்கூடியவை மற்றும் பருவகால இயலபுடையவை. ஆயுட்காலத் திறன் குறைவாக உள்ளதால் குளிர்பதன சேமிப்பு கிடங்கு போன்ற சிறப்பு ஏற்பாடுகள் Read More
ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகளில் குறிப்பாக விவசாய பொருட்களை சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் செயல்பாட்டில் உள்ள கட்டுப்பாடுகள் பற்றிய பகுப்பாய்வு
வேளாண் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் வரையறையுடன் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையின் முக்கியத்துவத்தை இவ்வாய்வு எடுத்துரைக்கிறது. மேலும், வேளாண் சந்தையில் கடந்து 20 வருடங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், அதிகமாகும் சந்தைப்படுத்தக்கூடிய உபரி, வளர்ந்து வரும் உற்பத்தி நிபுணத்துவம், மற்றும் மாறிவரும் நுகர்வோர் விருப்பம் ஆகியவற்றை இவ்வாய்வு எடுத்துரைக்கிறது. Read More
விவசாய இடுபொருட்களுக்கான சந்தைப்படுத்தல் நடைமுறைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது, குறிப்பாக புதிய தொழில்நுட்பம் மற்றும் அதிக மகசூல் தரும் உயர் மகசூல் வகை (HYV) விதைகளின் பயன்பாட்டின் பின்னணியில். வேளாண் வளர்ச்சியை ஆதரிக்க விவசாய இடுபொருள்கள், போக்குவரத்து வசதிகள், சந்தை விரிவாக்க சேவைகள் மற்றும் சந்தை நுண்ணறிவு நடவடிக்கைகளை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் இவ்வாய்வு எடுத்துரைக்கிறது.
விவசாயிகளுக்கு சிறந்த தொழில்நுட்பங்களை சென்றடைய தேவையான திறன்மிகு வேளாண் விரிவாக்க முறைகள்
தமிழகத்தில் வேளாண்மை பற்றிய பயிற்சி திட்டங்களை செயல்படுத்திடும்போது பின் வரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது: போதிய மனிதவளம் இன்மை, போதுமான கட்டமைப்பில்லாத விரிவாக்க செயல்பாடுகள், முடிவுகள் மற்றும் விளைவுகளை விட அதிகமாக இலக்குகள் மற்றும் சாதனைகளில் கவனம் செலுத்துவது.Read More
பல்லாண்டாக வரப்பெற்ற வேளான் விரிவாக்க திட்டங்களுக்கான உலகவங்கியின் நிதி தடைப்பட்டதிலிருந்து திட்டத்தின் பரிமாணங்கள் மேலும் நீர்த்துவிட்டது. இதன் விளைவாக, விவசாய உற்பத்தி, மதிப்பு கூட்டல் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் பெரிய இடைவெளி உண்டாக்கியுள்ளது, வளர்ச்சிக்கு முக்கிய முயற்சியாக பயிர்கள், குறிப்பாக தானியங்கள் மற்றும் பாசனப் பகுதிகளில் கவனம் செலுத்தப்பட்டன. பல்வேறு திட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் நடைமுறையின் காரணமாக இத்திட்டத்தின் செயல்பாடுகள் மறைத்துவிட்டது. பரவலாக்கப்பட்ட முடிவெடுக்கும் செயல்முறையை இணைத்த போதிலும், நிதி பற்றாக்குறை காரணமாக திட்டத்தின் செயல்திறன் மாவட்டங்களில் வேறுபட்டுள்ளது.
பால்வள மேம்பாட்டுத் திட்டங்கள்
தமிழகத்தில் 2004 முதல் 2007 வரையில் கால்நடைத் துறையில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் காரணமாக கால்நடை உற்பத்தியில் மகத்தான வளர்ச்சி விகிதம் குறித்து இவ்வாய்வு எடுத்துரைக்கிறது. மேலும் தீவன மேம்பாட்டு நடவடிக்கைகளில் தீவனதாள்களை துண்டாக்கும் இயந்திரம், தீவன பயிர் மற்றும் மேய்ச்சல் Read More
கோழிவளர்ப்பு மேம்பாட்டுத் திட்டங்கள்
சிவகங்கை மாவட்டத்தின் கோழி வளர்ப்பு திட்டத்தின் நடைமுறையினை இவ்வாய்வு மதிப்பீடு செய்துள்ளது. இத்திட்டத்தின் மீதான பயனாளிகளின் கருத்துகள் மற்றும் குறைகளை வெளிகொணர்ந்துள்ளது. இந்தியா கடந்த பத்தாண்டுகளில் கோழி உற்பத்தியில் 7.3% அதிகரிப்பு மற்றும் முட்டை உற்பத்தியில் 6% மற்றும் இறைச்சி உற்பத்தியில் 10% குறிப்பிட்ட வளர்ச்சி கண்டுள்ளது. Read More
தமிழகம் பிராய்லர் கோழி மற்றும் முட்டை உற்பத்தியில் முதன்மை மாநிலமாக உள்ளது. மேலும் இந்தியளவில் கோழி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
கால்நடை நோய் கட்டுப்பாடு நடவடிக்கைகள்
உரியதருவாயில் தடுப்பூசி போடுவதற்கும், கால்நடை நோய்களின் தாக்கத்தை குறைப்பதற்கும் வட்டார கால்நடை நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பூசி பிரிவின் அவசியம் குறித்து இவ்வாய்வு எடுத்துரைக்கிறது.Read More
இவ்வாய்வின் பரிந்துரைகள்: SWOT பகுப்பாய்வு மூலம் கால்நடை நோய் கட்டுபாட்டு திட்டங்களிலுள்ள இடைவெளிகள் மற்றும் தடைகளை அடையாளம் காண இவ்வாய்வு பரிந்துரைக்கிறது. அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி போட ஏதுவாக கால்நடை நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பூசி போடும் நிலையங்கள் அவசியத்தை இவ்வாய்வு பரிந்துரைக்கிறது. கால்நடை நோய்களால் ஏற்படும் பொருளாதார தாக்கத்தை, விவசாயிகளிடம் இதுகுறித்த விழிப்புணர்வின் அவசியத்தையும் இவ்வாய்வு எடுத்துரைக்கிறது. கால்நடை நோய் பரவல் மற்றும் மீள பரவுதல் மீதான அதிக கவனம் செலுத்துதல்.
ஆடுகள் மேம்பாட்டுத் திட்டங்கள்
இவ்வாய்வு ஆடுகளின் தீவனம் கெட்டுப்போவதற்கான காரணிகள் மற்றும் ஆடுகளுக்கு கால்நடை மருத்துவரின் தொடர் கண்காணிப்பு தேவையையும் எடுத்துரைக்கிறது. மேலும் ஆடுகளின் குடல் புழு நீக்கம், எடைஅதிகரிப்பு மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி அவசியத்தினையும் எடுத்துரைக்கிறது.Read More
மீன்வளத் திட்டங்கள்
இவ்வாய்வு மீன் வளர்ப்புக்கான நிதி ஒதுக்கீடு, மூலதனம் மற்றும் உள்ளீட்டு செலவுகள் உட்பட மொத்தம் ரூ 4.00 லட்சம் செலவில், இரண்டு ஆண்டுகளுக்கு 100% மானியமாக வழங்கப்பட்டுள்ளதை எடுத்துரைக்கிறது. மேலும் தனியார் பங்களிப்பினை பதிவு செய்யாதது மற்றும் மீன் மற்றும் விதை உற்பத்தி தரவுகளின் பற்றாக்குறையினை எடுத்துரைக்கிறது. Read More
கால்நடை பராமரிப்பு நிலையங்களின் மேம்பாடு, கால்நடை மருத்துவ சேவைகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் நேர்த்தியான நோய் கட்டுப்பாடு மற்றும் பயிற்சி மையம்-தொழில்-நிறுவனம் இணைப்புகள்
கால்நடை நிறுவனங்களின் மேம்பாடு, கால்நடை சேவைகளை வலுப்படுத்துதல் மற்றும் நேர்த்தியான நோய் கட்டுப்பாடு மற்றும் பயிற்சி மையங்களை நிறுவுதல் ஆகியவற்றில் இவ்வாய்வில் முக்கியம் அளிக்கப்பட்டுள்ளது. கால்நடை சேவைகள் மற்றும் நோய் கட்டுப்பாட்டை மேம்படுத்த எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் முன்முயற்சிகளை எடுத்துரைக்கிறது. Read More
நீர்ப்பாசனத்தில் எரிசக்தி பற்றாக்குறையின் தாக்கத்தை அளவிடுதல்
நீர்ப்பாசனத்தில் எரிசக்தி நெருக்கடியின் தாக்கத்தை அளவிடுவதை இவ்வாய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. குறைந்த விவசாய உற்பத்தி மற்றும் உணவு பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கம் விவசாய உள்ளீட்டு மானியக் கொள்கைகளை செயல்படுத்தியன் விளைவாக நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுகிறது. Read More
தமிழ்நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு பண்ணைகளில் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான உத்திகளை கண்டறிதல்
தமிழ்நாட்டில் குறைந்த உரமூட்டல் மற்றும் சந்தை ஒருங்கிணைப்பு இல்லாத காரணமாக சிறு மற்றும் குறு விவசாயகளின் குறைந்த உற்பத்தித்திறன் குறித்து இவ்வாய்வு எடுத்துரைக்கிறது. இவ்வாய்வின் சிறப்பம்சம், சிறு மற்றும் குறு பண்ணைகளில் உரமூட்டலில் உள்ள இடர்பாடுகளை கண்டறிந்த, வாய்ப்பு மற்றும் வளங்கள் Read More
பயிலரங்கங்கள்
Rural Development
Sustainable Farming
Livestock Management
Veterinary Science
Agricultural Innovation
Water Management
புதிதாக தோன்றும் பிரச்சினைகள், உடனடித் இடையீடுகள் மற்றும் கவனம் தேவைப்படும் பொருண்மைகள், புதிய கருப்பொருட்கள் போன்றவற்றின் அடிப்படையில் துறைசார் பயிலரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. பயிலரங்குகளின் பரிந்துரைகள் உரிய நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளுக்கு அனுப்பப்படுகின்றன. இக்குழுமத்தால் நடத்தப்பட்ட சில கருத்தரங்குகள்:
பாசன நீர் தேவையினை அளவிடல்
அதிக மக்கள் தொகை பெருக்கத்தால் பின்வரும் துறைகளில் நீர் ஆதாரங்களில் மீது புதிய தேவைகளை உருவாக்குகிறது உணவு உற்பத்தி, நகராட்சி குடிநீர் வழங்கல், தொழில்துறை நீர் பயன்பாடு, மின் உற்பத்தி, பொழுதுபோக்கு நீர் விளையாட்டு மையங்கள்.Read More
மேலும் நீர் பயன்பாட்டை அளவிடுவதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் நீர்ப்பாசன முறையை மறுசீரமைப்பதற்கான முக்கிய இடையீடுகள் குறித்து இப்பட்டறையில் விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளில் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதலின் சாத்தியக்கூறுகள்
வேளாண் துறையில் பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல், தோட்டக்கலை பயிர் பதப்படுத்துதல், கழிவுகளை வளமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள், சிவப்பு இறைச்சி, பால் மற்றும் கோழிப்பண்ணையில் பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல், தமிழ்நாட்டில் பதப்படுத்துதல் மற்றும் மீன் பொருட்களின் மதிப்பு கூட்டல் ஆகியவற்றின் Read More
இப்பட்டறையின் முக்கிய முடிவுகள், அவை, i) அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை ii) வட்டார அளவிலான வேளாண் உற்பத்தி பொருட்களை பதப்படுத்தி பாதுகாக்கும் கலன்கள் iii) மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய அடிப்படையிலான பால் பொருட்கள் iv) பல்வேறு மீன் பொருட்களை அடையாளம் காண்பதற்கான சந்தை ஆய்வு v) துப்புரவு ஆய்வாளர்களுக்கு பயிற்சித் திட்டம் vi) பண்ணை மொத்த சேமிப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வது மற்றும் vii) தற்போதைய குளிர்பதன சேமிப்பு முறையை பகுப்பாய்வு செய்து அதை சரிசெய்வது.
கடற்பாசிகள் - எரிபொருள் சாத்தியகூறு
கடற்பாசி ஒரு சாத்தியமான எரிபொருள் மூலமாகும். இதனால், பயோடீசல், மீத்தேன் மற்றும் ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய முடியும். மேலும் இது ஒரு சிறந்த ஊட்டச்சத்தாகும். ஏனெனில் பெரும்பாலான பாசிகளில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளுடன் முழுமையான புரதங்கள் உள்ளன.Read More
உயிரி எரிபொருள் மற்றும் உணவுத் தொழில்துறையில் தற்போதைய தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள இப்பட்டறை பரிந்துரைத்தது.
தமிழ்நாட்டில் உள்நாட்டு மீன்வள மேம்பாடு
மீன்வளத் துறை மாநிலத்தின் மிக முக்கியமான உணவு உற்பத்தி துறைகளில் ஒன்றாகும், இது பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களில் பெரும் பகுதியினரின் வாழ்வாதாரத்திற்கும் உணவுப் பாதுகாப்பிற்கும் இத்துறை பங்களிக்கிறது. சமீப ஆண்டுகளில், இத்துறையின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது. Read More
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சிறுதானியங்கள்
ஊட்டச்சத்து உள்ளடக்கத்தின் அடிப்படையில் அரிசி மற்றும் கோதுமையை விட சிறுதானியங்கள் முன்னணியில் உள்ளன என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறுதானியங்களின் ஆரோக்கிய நன்மைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தல், நீரிழிவு/இதய நோயாளிகளுக்கான உணவு அட்டவணையில் ஒரு நாளைக்கு ஒரு சிறுதானிய உணவு மற்றும் ஓட்ஸ்.Read More
பொது விநியோகத் திட்டம்/கூட்டுறவு நிலையங்கள் மூலம் சமைக்க ஏதுவான சிறுதானியங்கள் விற்பனை ஊக்குவித்தல், சுய உதவிக் குழுக்களுக்கு உற்பத்தி சார்ந்த திட்டங்களை உருவாக்குதல், புதிய தலைமுறை சிறுதானிய உணவுப் பொருட்களின் உற்பத்திக்கான வட்டார அளவிலான சிறிய அளவிலான பதப்படுத்தும் அலகுகள் அமைத்தல் மற்றும் ஆராய்ச்சி மூலம் மேம்படுத்துதல்.
வேளாண்மை மற்றும் வேளான் சார் துறைகளில் இளைஞர்கள்
இப்பட்டறையில் வலியுறுத்தப்பட்ட பரிந்துரைகள் கிராமப்புற வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், சிறுதானிய வேளாண் தொழில் முனைவோர் பயிற்சி மூலம் வண்ணமீன் தொழில் மேம்பாட்டிற்கு ஏதுவாக தனியார் பங்களிப்புடன் உள்கட்டமைப்புடன் கொண்ட வண்ணமீன் பூங்கா அமைத்தல், வண்ண மீன் ஏற்றுமதியை ஊக்குவித்தல், கடல் வண்ண மீன்வளத்திற்கான பயிற்சிகளை Read More
உயர் தொழில்நுட்ப தோட்டக்கலை-ஒரு இலாபகரமான முயற்சி
உயர் தொழில்நுட்ப தோட்டக்கலையில் பின்வரும் கூறுகளை ஆராய்வதை இப்பட்டறை நோக்கமாக கொண்டது, பிரச்சினைகளுக் தீர்வு காணுதல், தோட்டக்கலையை லாபகரமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல். பயிரிடப்பட்ட நிலங்களில் தனியார் ஒத்துழைப்புடன் மாதிரி தோட்டகலை பண்ணை உருவாக்குதல், அந்த மாதிரி பண்ணைகள் விவசாயிகளுக்கு Read More
தமிழ்நாட்டில் தீவிர நெல் சாகுபடி முறை (SRI) பின்பற்றுதல் மற்றம் பின்பற்றாமையில் உள்ள சவால்கள்
இவ்வாய்வின் நோக்கமானது i) இளம் நாற்றுகளை நடவு செய்தல் ii) 25 செமீ x 25 செமீ பரப்பளவு கொண்ட ஒற்றை நாற்றுகளை சதுரமாக நடவு செய்தல். iii) இயந்திரக் களையெடுக்கும் முறையைப் பின்பற்றுதல் iv) மாற்று உலர்த்துதல் மற்றும் ஈரப்படுத்துதல் மற்றும் v) நாற்றங்கால் பகுதி மற்றும் விதை வீதம் குறைத்தல். பரிந்துரைகள் சில வழங்கப்பட்டது. Read More
தமிழ்நாட்டில் எருமைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான உத்திகள்
எருமைகளின் எண்ணிக்கையை மேம்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும், கால்நடைகள் மற்றும் தீவனங்களுக்கான மானியத் திட்டங்களை ஊக்குவிப்பதற்கும், எருமைகள் வளர்ப்புக்கு புதிய பெண்கள் சுய உதவிக் குழுக்களை உருவாக்குவதற்கும், எருமைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது/தரமான விந்து உற்பத்தி/இன தழுவல் குறித்த தீவிர ஆராய்ச்சியை Read More
தமிழ்நாட்டில் சிறுதானியங்களை மேம்படுத்துவதற்கான பட்டறை
சிறுதானியங்கள் அவற்றின் ஊட்டச்சத்து நன்மைகள் காரணமாக உலகளவில் பிரபலமடைந்து வருகின்றன. அவை பிசுபிசுப்பில்லாத, ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. மேலும், அரிசி மற்றும் கோதுமையுடன் ஒப்பிடும்போது குறைந்த சக்கரை அளவு கொண்டது. Read More
ஒருங்கிணைந்த பண்ணை முறை குறித்த பயிலரங்கு
வேளாண் துறைகளை ஒருங்கிணைத்து பண்ணைமுறையில் திருத்திய சாகுபடி மேற்கொண்டு ஒரு போகத்தில் மகசூலை அதிகரித்து உழவர்களின் பொருளாதார நிலை உயர்த்தும் வாய்ப்பைக் கண்டறிவதை இப்பட்டறை நோக்கமாகக் கொண்டுள்ளது. Read More
கால்நடை பராமரிப்பில் முக்கியமான மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த மதிப்பீட்டு ஆய்வுகள்
அதிகமான கிராமப்புற குடும்பங்கள் கால்நடைகளை வாழ்வாதாரத்திற்காக சார்ந்துள்ளனர். மேலும் கால்நடைகள் கிராமப்புற ஏழைகளுக்கும் இளைஞர்களுக்கும் லாபகரமான வேலைவாய்ப்பை வழங்குகிறது. முக்கியமான கால்நடை மேம்பாட்டுத் திட்டங்களின் சமூக-பொருளாதார தாக்கம், கால்நடைகள் பாலினத் தேர்வுக்கு உதவும் Read More
வேளாண்மையில் முக்கியமான வளர்ச்சித் திட்டங்கள் குறித்த மதிப்பீட்டு ஆய்வுகள்
விவசாயிகளின் முழு பங்கேற்புடன் பயிர்களை மேம்படுத்துவதற்காக மேம்பட்ட தொழில்நுட்பத்தை பரவலாகப் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்தி, மாநிலத்தில் இரண்டாவது பசுமைப் புரட்சியைத் தொடங்க மாநிலத் திட்ட ஆணையம் இவ்வாய்வை நடத்தியது. Read More
தற்போது மேற்கொள்ளப்படும் பணிகள்
Current Studies/Assessments of Schemes
- தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்தும் தொழிலகங்களை அட்டவணைப்படுத்துதல்
- நீர் சமன்பாடு- ஓர் ஆய்வு
- தமிழ்நாட்டில் புவிசார் குறியீட்டு வழங்கப்பட்ட விவசாய உற்பத்தி பொருட்கள் மீதான தாக்கத்தின் நிலை குறித்து ஓர் ஆய்வு