ஊரக வளர்ச்சி
மற்றும் மாவட்ட
திட்டமிடல் குழுமம்

முக்கிய பணிகள்

இக்குழுமம் ஊரக வளர்ச்சி, ஊரக  கட்டமைப்பு, வேலைவாய்ப்பு   ஆகியவை தொடர்பாகவும் அவற்றில் எழும் சவால்களை எதிர்கொள்ளவும்,  புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் புதுமையான திட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்குவதில் பங்காற்றுகிறது. மேலும், ஊரக வளர்ச்சித் தொடர்பாக  முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு தமிழ்நாடு அரசிற்கு தக்க ஆலோசனைகளை வழங்குகிறது.

ஊரக வளர்ச்சிக்கான மேம்பாட்டுத் திட்டங்களை ஒருங்கிணைக்கும் மையம்

ஊரக வளர்ச்சி மற்றும் மாவட்ட திட்டமிடல் குழுமம்,  ஓர் ஒருங்கிணைக்கும் மையமாக செயல்படுவதோடு, கிராமப்பகுதிகளில் அனைவரையும் உள்ளடக்கிய சமச்சீர் வளர்ச்சிக்காக செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்களைக் கண்காணிக்கிறது. அத்திட்டங்கள் மாநிலத்தில் உள்ள பல்வேறு வட்டாரங்களில்  சமமான வளர்ச்சியை உறுதி செய்வதையும்,   சமூகப் பொருளாதாரக் கட்டமைப்புகளில்  சமச்சீரான மேம்பாட்டை ஊக்குவிப்பதையும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றன.

இக்குழுமத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்

  • மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி
  • வளமிகு வட்டாரங்கள் திட்டம் (மலைப்பகுதிகளையும் உள்ளடக்கியது)

இக்குழுமத்தால் கண்காணிக்கப்படும் திட்டங்கள்

  • முன்னேற விழையும் மாவட்டங்கள் திட்டம்
  • முன்னேற விழையும் வட்டாரங்கள் திட்டம்
ஆய்வுகளும் அறிவுசார்ப்பகிர்வுகளும்

இக்குழுமம் ஊரக வளர்ச்சி, ஊரக மாற்றம், ஊரக வீட்டுவசதி, மகளிர் மேம்பாடு முதலியவை தொடர்பான துறைகளையும் வல்லுனர்களையும் ஒருங்கிணைத்து பயிலரங்குகளை நடத்துகிறது.

குழுமத்துடன் தொடர்புடைய துறைகள்

இக்குழுமம் கீழ்காணும் தலைமைச் செயலகத் துறை மற்றும் அதன் கீழ் இயங்கும் துறைகளுடன் இணைந்து செயல்படுகிறது:

தலைமை செயலகத்துறை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
  • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம்
  • தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம்

மேலும் இக்குழுமம் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (பயிற்சி)  நிறுவனத்துடனும்  வட்டார ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (பயிற்சி) நிறுவனங்களுடனும் இணைந்து செயல்படுகிறது.

களஆய்வுகளும் மதிப்பீடுகளும்

கிராமப்புற வறுமையை களைவதற்காகவும் கிராமப்புற மகளிரின் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்காகவும் செயல்படுத்தப்பட்ட சூரியசக்தியால் இயங்கும் முதலமைச்சரின் பசுமை வீட்டுத் திட்டம் மற்றும் இந்திரா ஆவாஸ் யோஜனா ஆகிய ஊரக வீட்டு வசதித் திட்டங்களின் தாக்கங்கள்

நாகரீகமடைந்த சமூகத்தின் அடிப்படைத் தேவைகளுள் உறைவிடமும் ஒன்றாகும்.  பாதுகாப்பு, சுயமரியாதை, சமூகநிலை, பண்பாட்டு அடையாளம், நிறைவு மற்றும் சாதனை ஆகியவற்றின் அடிப்படையில் உறைவிடம் அதிக முக்கியத்துவம் Read More

View File

"குடிநீர் வழங்கும் ஆதாரங்களின் செயல்திறன் மற்றும் கிராமப்புற குடியிருப்புகளுக்கு குழாய் வழியாக வழங்கப்பட்ட நீர் பயன்பாட்டு நிலை" பற்றிய ஆய்வு அறிக்கை.

இந்தியாவின் முன்னேற்றமடைந்த மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, நாட்டின் பரப்பளவில் சுமார் 4% நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. ஆனால், பல்வேறு துறைகளில் அதிகரித்து வரும் நன்னீர் தேவையை பூர்த்தி செய்ய, நாட்டில் உள்ள நீராதாரங்களில் 3 சதவீதத்தை மட்டுமே தமிழ்நாடு கொண்டுள்ளது. Read More

View File

பயிலரங்குகள்

துறை தொடர்பான பல்வேறு கருத்துக்கள் அதாவது எதிர்வரும் பிரச்சனைகள், உடனடி தீர்வுகள் தேவைப்படும் விடயங்கள் மற்றும் புதிய கருத்துருக்கள் மீதான பயிலரங்குகள் மற்றும் கருத்தரங்குகள் இக்குழுமத்தால் ஒருங்கிணைத்து நடத்தப்படுகின்றன. இப்பயிலரங்குகளில் இருந்து பெறப்படும் பரிந்துரைகள் தக்க நடவடிக்கைகளுக்காக உரிய துறைகளுக்கு அனுப்பப்படுகின்றன. இத்துறையால் நடத்தப்பட்ட சில பயிலரங்குகளின் விவரங்கள்:

வீடுகளுக்கு குடிநீர்க்குழாய் இணைப்பினை அளித்தல்

மாநில திட்டக்குழு கிராமப்புறங்களில் குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்கும், வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் இப்பயிலரங்கை நடத்தியது. இக்கலந்துரையாடல் நீர் அமைப்புகளைப் பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றில் தமிழ்நாடு குடிநீர் Read More

View File

திட்டம் + பயன்படுத்தி பரவலாக்கப்பட்ட திட்டமிடலை மேற்கொள்ளுதல்

தமிழ்நாட்டில், மாவட்டத் திட்டக் குழுக்கள்  மாவட்டங்களில் திட்டங்களை மதிப்பாய்வு செய்வதிலும் ஒருங்கிணைப்பதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன. தேவை அடிப்படையிலான திட்டமிடலுக்கான தரவுகளை சேகரித்து உள்ளீடு செய்வதில் உள்ளூர் அதிகாரிகளின் திறனை மேம்படுத்த Read More

View File

தமிழ்நாடு: திறந்தவெளி மலக்கழிப்பில் இருந்து முற்றிலுமாக விடுபடுதல்

மாநில திட்டக்குழு, மாநிலத்தில் திறந்த வெளி மலம் கழித்தல் இல்லாத நிலையை எவ்வாறு அடைவது என்பதைப் பற்றி விவாதிக்க  இப்பயிலரங்கை ஏற்பாடு செய்தது.

யுனிசெஃப் மற்றும் ஊரக வளர்ச்சி (ம)   ஊராட்சித்துறையின் கீழ் நடத்தப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தின் ஊடக அறிவியல் துறையின் ஆய்வின் நுண்மைகளான கடந்த கால அனுபவங்களில் இருந்து பெறப்பட்ட உத்திகளுக்கு Read More

View File

தற்போது கண்காணிக்கப்பட்டு வரும் திட்டங்கள்

முன்னேற விழையும் மாவட்டங்கள் திட்டம்

2018 ஆம் ஆண்டிலிருந்து இக்குழுமம்  தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய பின்தங்கிய மாவட்டங்களின் சமூக பொருளாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்ற முன்னேற விழையும் மாவட்டங்கள் திட்டத்தைக்  கண்காணித்து வருகிறது.

இத்திட்டமானது இம்மாவட்டங்களின் வளங்களை வலுப்படுத்துவதற்கும் விரைவான முன்னேற்றத்திற்காக   எய்தக்கூடிய இலக்குகளுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கும் முக்கியத்துவம்  அளித்து செயல்பட்டு வருகிறது.

மேலும் காண்க இணைப்பு ->

முன்னேற விழையும் வட்டாரங்கள் திட்டம்

இத்திட்டம், தமிழ்நாட்டில் உள்ள மிகவும் வளர்ச்சி குறைந்த 16 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம்  மிகவும் பின்தங்கிய  வட்டாரங்களில் விரைவான வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் சமூகப்பொருளாதார முன்னேற்றங்களை ஏற்படுத்தவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் காண்க இணைப்பு  ->

தமிழ்நாட்டில் ஜல்ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்பட்டதனால் ஊரக குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்த  ஆய்வு

மேற்கூறிய ஆய்வானது இக்குழுமத்தால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் சமூகக் குழுக்களில் தலைமுறைகளுக்கிடையே ஏற்பட்ட மாற்றங்கள்

மேற்கூறிய ஆய்வானது இக்குழுமத்தால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செயல்பாடு தொகுப்பு