பிரிவு
நிலப்பயன்பாட்டுப்
பிரிவு
முக்கிய செயல்பாடுகள்
இப்பிரிவு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனங்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு ஆகிய துறைகளின் தற்போதைய பிரச்சினைகள் மற்றும் சலால்கள் குறித்த கூட்டங்கள், பட்டறைகள் மற்றும் ஆய்வுகளை ஏற்பாடு செய்து அரசுக்கு பரிந்துரை வழங்குகிறது.
துறைச்சார்ந்த விவாதங்கள்
இப்பிரிவு சம்மந்தப்பட்ட துறைச்சார்ந்த அதிகாரிளுடன் விவாதங்களை மேற்கொள்கிறது. இதன்மூலம் மாநில மற்றும் மத்திய அரசின் திட்டங்களின் முன்னேற்றம், துறைச்சார்ந்த சிறந்த நடைமுறைகளை பரிமாற்றம் செய்தல், துறைச்சார் சவால்களை சுட்டிக்காட்டுதல் மற்றும் முக்கிய இலக்குகளை பட்டியலிடுகிறது. மேலும் மதிப்புமிக்க நுண்ணறிவை வழங்குவதோடு, உகந்த நடைமுறைகளை பரிந்துரை செய்து அரசின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கிறது.
ஆராய்ச்சி மற்றும் அறிவு பகிர்தல்
இப்பிரிவு ஆராய்ச்சி நிறுவனங்கள். கல்வி நிறுவனங்கள் மற்றும் பங்கேற்பாளர்களுடன் ஆய்வுகள் நடத்துகின்றன. இந்த ஆய்வுகள் நிலப்பயன்பாடு, நில வளங்கள். நிலச்சீரழிவு மற்றும் கொள்கைகள். மேம்பாட்டுத் திட்டங்களின் தாக்கம் ஆகியவற்றில் எழும் சிக்கல்களை பகுப்பாய்வு செய்கிறது. இதன் மேலான இலக்கானது, இந்த களங்களின் பல்வேறு கொள்கைகள் மற்றும் மேம்பாட்டு திட்டங்களின் தாக்கத்தை மதிப்பிடுவதாகும்.
செயலக துறைகள்
இப்பிரிவு கீழ்க்கண்ட தலைமைச்செயலகத் துறைகள் மற்றும் அதன் துறை தலைவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை
- வனத்துறை
- சுற்றுச்சூழல் துறை
- தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
- தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம்
- அரசு ரப்பர் கழகம்
- தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம்
நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை
- நகராட்சி நிர்வாக ஆணையரகம்
- பேரூராட்சிகளின் ஆணையரகம்
- பெருநகர சென்னை மாநகராட்சி
- சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம்
- தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்
- தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம்
- தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம்
- தமிழ்நாடு நகர்ப்புர உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம்
- சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை
- புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகம்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை
- சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
- நகர் ஊரமைப்பு இயக்ககம்
- தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்
- தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்
- கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் (வீட்டுவசதி )
- சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம்
தமிழ்நாடு மாநில நில பயன்பாட்டு ஆராய்ச்சி வாரியம் (TNSLURB)
தமிழ்நாடு மாநில நிலப்பயன்பாட்டு ஆராய்ச்சி வாரியமானது 2011 ஆம் ஆண்டு மாநிலத் திட்டக் குழுவால் நிரந்தர அமைப்பாக நிலம் மற்றும் நீர் வளங்களைப் பாதுகாப்பதற்கும், மாநிலத்திலுள்ள மக்களின் நன்மைக்காக அவற்றின் நீடித்த பயன்பாட்டிற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டது.
கடந்த 12 ஆண்டுகளில், 75 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி ஆய்வுகளை மேற்கொண்டு நில பயன்பாடு தொடர்பான பல்வேறு கருப்பொருள்களில் 15 பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்தியுள்ளது. இந்த ஆராய்ச்சி முயற்சிகளின் முடிவுகள் நுணுக்கமாக ஆவணப்படுத்தப்பட்டு கொள்கைப் பரிந்துரைகளாக சம்மந்தபட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆராய்வுகள் பல்வேறு அரசாங்கத் துறைகளுக்கு வழிகாட்டி, ஆராய்ச்சி நுண்ணறிவுகளின் அடிப்படையில் முடிவுகளை மதிப்பிடுவதற்கும் மேம்படுத்துவதற்கும் மற்றும் திட்டங்களை வகுப்பதில் அவர்களுக்கு உதவுகின்றன. மேலும் விவரங்களுக்கு TNSLURB இணைப்பு.
மதிப்பீடுகள் & ஆய்வுகள்
தமிழ்நாட்டில் காடுகளின் நிலை
தமிழ்நாட்டில் காடு மற்றும் மரங்களின் பரப்பளவு இப்போது சுமார் 30,843.23 சதுர கிமீ ஆகும், இது மொத்த புவியியல் பரப்பில் 23.71% ஆகும். 2030 ஆம் ஆண்டுக்கு முன் அரசு தனது இலக்காக 33 சதவீதம் பசுமையான பகுதியாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. Read More
நடப்பில் உள்ள ஆய்வுகள்
தமிழ்நாட்டில் கடலோர மக்களின் சமூக-பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றிய மதிப்பீடு
14 கடலோர மாவட்டங்களில் உள்ள கடலோர சமூகங்களின் சமூக பொருளாதார பாதிப்புகளை, குறிப்பாக மீனவர் சமூகத்தின் சமூக-பொருளாதார சுற்றுச்சூழல் பாதிப்பை கண்டறிவதே இந்த ஆய்வின் நோக்கமாகும். 14 கடலோர மாவட்டங்களிலும் கள ஆய்வு மற்றும் குழு விவாதம் முடிக்கப்பட்டுள்ளது. Read More
தமிழ்நாட்டில் நிலப்பயன்பாட்டு நிலப்பரப்பில் காலநிலை மாற்றத்தின் விளைவு பற்றிய பகுப்பாய்வு
1991 முதல் 2021 வரையிலான முப்பது வருடங்களாக நிலப்பயன்பாடு மற்றும் நிலப்பரப்பில் காலநிலை மாற்றத்தன்மைப் பொருத்து ஏற்பட்டுள்ள மாறுபாடுகளை ஆய்வு செய்வதும், இதனால் உள்ளூர் காலநிலை மாற்றத்தில் ஏற்படும் விளைவுகளை ஆய்வு செய்வதும் இதன் நோக்கமாகும். Read More
நிலையான வளர்ச்சி இலக்குகளில் தமிழ்நாட்டின் நிலப்பயன்பாட்டின் தாக்கம்
நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் நிலப்பயன்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. நிலம் தொடர்பான இலக்குகளைக் கொண்ட நிலையான வளர்ச்சிகளை 2030 -க்குள் அடைவது இதன் முக்கிய நோக்கமாகும். இந்த ஆய்வு 17 நிலையான வளர்ச்சி இலக்குகளில் 11 இலக்குகளை அடைகிறது. Read More
இந்த ஆய்வில் அடையாளம் காணப்பட்ட நீடித்த நிலையான அடைவுகள், வறுமை மற்றும் சமத்துவமின்மையை நிவர்த்தி செய்ய ஒரு சிறந்த நிலைப்பாட்டை எடுப்பதில் போதுமான அளவு செல்லாமல் போகலாம். ஒவ்வொரு நிலம் தொடர்பான துணை இலக்கும் நிலையான வளர்ச்சிக்கான மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது மற்றும் பரந்த அளவிலான நோக்குகளுடன் நிலத்தை இணைக்கிறது.
தமிழ்நாட்டில் நகர்ப்புறத்தை மேம்படுத்துவதற்கான இயற்கை அடிப்படையிலான தீர்வுகளுக்கான கட்டமைப்பு
இயற்கை அடிப்படையிலான தீர்வுகள் (NbS) என்பது சுற்றுச்சூழல் அமைப்பின் அனைத்து தேவைகளையும் கருத்தில் கொண்டு அதனை மேம்படுத்துவதற்கான அணுகுமுறையாகும். தேவையான உட்கட்டமைப்பு வசதிகளுக்குள் சுற்றுச்சூழலியலை கருத்தில்கொண்டு இயற்கை அடிப்படையிலான தீர்வுகள் உருவாக்கப்படுகிறது. Read More
செயல்முறைகளை சேவைகளாக உள்ளடக்குவதை வெளிப்படையாக நோக்கமாகக் கொண்ட முறைகள் இக்குழுவிற்குப் பொருந்தும். மனித நல்வாழ்வு மற்றும் பல்லுயிர் நலன்களை ஒரே நேரத்தில் மேம்படுத்துவதன் மூலம், நீர் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு, பொது சுகாதாரம் மற்றும் பேரழிவு அபாயக் குறைப்பு போன்ற முக்கிய சமூக சவால்களை எதிர்கொள்ளும். இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க, நிலையான முறையில் நிர்வகிக்க அல்லது மீண்டும் நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை NbS வழங்குகிறது. இது ஒருங்கிணைக்கப்பட்ட பேரிடர் தணிப்பு, காலநிலை தாங்கும் உத்திகள் மற்றும் ஐ.நாவின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு ஏற்ப நிலையான பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பங்களிக்கிறது. இந்த திட்டம் GIZ மற்றும் CUBE உடன் இணைந்து செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற வெப்பத்தீவு விளைவுகளின் பாதிப்பை குறைப்பதற்கான நகர்ப்புற வெப்பத்தீவு பகுதிகளை கண்டறிதல் மற்றும் தணிப்பு உத்திகள்
இடம்பெயர்வு மற்றும் அதிகரித்து வரும் நகரமயமாக்கல் காரணமாக கிராமப்புறங்களில் உள்ள மக்கள்தொகையை விட நகர்ப்புறங்களில் வசிப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வருகிறது. நகரமயமாக்கல் அதிகரித்து வருவதால் நகரங்கள் வெப்பத்தீவு விளைவுகளால் பாதிக்கப்படுகிறது. Read More
இந்த ஆய்வின் நோக்கமானது,மேற்பரப்பு நிலையில் உள்ள நகர்ப்புற வெப்பப்பகுதியை கண்டுபிடிப்பதாகும். இதன் முதன்மையான குறிக்கோளானது, தமிழகத்தைச் சுற்றியுள்ள தற்போதுள்ள வெப்ப பகுதியை வரைபடமாக்குவதாகும். இதன் மூலம் நகர்ப்புற வெப்பதீவு விளைவு தணிக்கும் திட்டத்தை தயாரிக்க இயலும்.
கூட்டு முயற்சிகள்/செயல்திட்டம்
தமிழ்நாட்டிற்கான வெப்ப மேலாண்மை உத்திகள்
வெப்பத்தைத் தணிப்பது பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புடையது. மேலும். இது, அதிகமான வெப்பத்தில் மக்களின் ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் உற்பத்தித்திறனுக்கு முக்கியமானது. வளர்ந்து வரும் பொருளாதார நாடான இந்தியாவில், குளிர்சாதனங்களின் அதிகரிப்பு, தனிநபர் வருமானம் Read More
தமிழகத்தில் இதற்கான சிறந்த உத்திகளை வரையறுக்கும் பொருட்டு மாநில திட்டக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் துறைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், தேசிய / சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் ஆகிய நிபுணர்களின் ஆலோசனையுடன், துணை பிரிட்டிஷ் உயர் ஆணையத்தின் நிதி உதவியுடன், உலக வள நிறுவன (WRI) மூலமாக இதற்கான உத்திகளின் தொகுப்பு அறிக்கை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. முதற் செயற்குழுக் கூட்டம் 28.08.2023 அன்று மாநிலத் திட்டக்குழுவில் நடைபெற்றது. மேலும், இதன் முக்கிய தாக்கங்கள் அடிப்படையில் நான்கு துணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
குறைந்த கார்பன் உமிழ்வு - திறன் பகிர்வு
INDIA-UK PACT திறன் பகிர்வு திட்டத்தின் கீழ் துணை பிரிட்டிஷ் உயர்குழு மற்றும் UK-வில் உள்ள CENEX உடன் இணைந்து சென்னையில் குறைந்த கார்பன் உமிழ்வு பகுதி (Low Carbon Emission Zoning) – Toolkit தயார் செய்வதற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் 11.09.2023 அன்று மாநிலத் திட்டக்குழுவில் நடைபெற்றது. Read More
மேலும், திறன் பகிர்வு கருத்தரங்கு 09.10.2023 அன்று சென்னையில் தாஜ் கன்னிமாராவில் நடைப்பெற்றது. திரு. ஆலிவர் பால்ஹட்செட், பிரிட்டிஷ் துணை உயர் ஆணையர் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்களில், UKPACT திட்டத்தின் முக்கிய செயல்பாடுகள் குறித்து பேசினார். சென்னையில் குறைந்த கார்பன் உமிழ்வு மண்டலங்களை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல் மற்றும் செயல்முறைகள் குறித்து Cenex இன் போக்குவரத்துத் தலைவர் திரு. ஸ்டீவ் கரோல் விவரித்தார். சென்னைக்கான குறைந்த கார்பன் உமிழ்வு மண்டலத்தை உருவாக்குவதற்கான பரிந்துரைகளை தொடர்புடைய துறைகள் மற்றும் நிறுவனங்கள் வழங்கின.
UK-வில் உள்ள CENEX உதவியுடன் குறைந்த கார்பன் உமிழ்வு பகுதிக்கான ToolKit தயாரிக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
திறந்த மற்றும் நிலையான நகர திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுக்கான ஆராய்ச்சி - TOSCA
28.08.2023 அன்று மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட மாநில நில பயன்பாட்டு ஆராய்ச்சி வாரியத்திற்கு TOSCA கருவியை ஜெர்மன் அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட GIZ (German Agency for International Cooperation) வழங்கியுள்ளது. இந்த கருவி நகர்ப்புற திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுக்கான ஆராய்ச்சியை எளிதாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் (SADP)
சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் (SADP)
தமிழ் நாட்டில் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் (SADP) 2015-2016 அன்று துவக்கப்பட்டது. இதற்கு முன்னர் இது மலைபகுதி மேம்பாட்டு திட்டம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை திட்டமாக இருந்தது. இத்திட்டமானது யூனிட் 1-ல் கீழ் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்ட மலைவாழ் பகுதிகளும், யூனிட் 2-ன் கீழ் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைவாழ் பகுதிகளும் அடங்கும்.. 2021 இல், யூனிட்-I மற்றும் யூனிட் II ஒன்றாக இணைந்து, நீலகிரி மாவட்டங்களில் இயங்குகிறது. இந்த திட்டம், மலைவாழ் மக்களின் நீர், உற்பத்தி நிலப்பரப்புகள், மனித வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளுக்கு இடையிலான தொடர்புகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.இத்திட்டத்திற்காக அரசு ரூ.75.00 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.