இரண்டு வருட கோவிட்-19 காரணமாக, நாடு முழுவதும் நிறுவனங்கள் செயல்படா காலத்தில் பள்ளிகள் நீண்ட காலமாக மூடப்பட்டதன் விளைவாக ஏற்படும் கல்வி பின்னடைவைத் தணிக்க பள்ளிக்கல்வித் துறையால் இல்லம் தேடி கல்வி (வாசலில்கல்வி) திட்டம் துவக்கப்பட்டது.
செப்டம்பர் 2022 இல் நடத்தப்பட்ட விரிவான கணக் கெடுப்பின் மூலமாக, திட்டத்தின் தாக்கத்தை விரைவாக மதிப்பீடு செய்தல் மாநில திட்டக்குழுவால் மேற்கொள்ளப்பட்டது. இந்த மதிப்பீட்டு ஆய்வில், அரியலூர், கடலூர், நாகப்பட்டினம், சேலம், திருவாரூர் மற்றும் விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள 362 பள்ளிகளில் தன்னார்வத் தொண்டர்கள், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தீவிரமாகப் பங்கேற்றுள்ளனர்.