வேலைவாய்ப்பு
கல்வி மற்றும்
வேலைவாய்ப்பு
முக்கிய செயல்பாடு
கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளுக்கு ஏற்றவாறு புதுமைத் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை இக்குழுமம் உருவாக்குகிறது, மேலும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, உருவாகும் புதிய சவால்களை தீர்க்க உரிய முயற்சிகளை மேற்கொள்கிறது. இது தவிர, இக்குழுமம், கீழ்க்குறிப்பிட்டுள்ளத் துறைகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவதன் மூலம் மாநில அரசுக்கு முக்கிய கொள்கை முடிவுகள் குறித்த வழிகாட்டுதலை வழங்குகிறது:
- கல்வி
- வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் நலன்
- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு
- தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்பு
- சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையம்
துறைசார்ந்த கலந்துரையாடல்கள்
விவாதங்களுக்கு உட்படுத்த வேண்டிய தலைப்புகளையொட்டி, அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் வல்லுநர்களுடனான கலந்துரையாடல் கூட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படவும் அது தொடர்பான சவால்களை எதிர்கொள்வதற்கும் இக்குழுமம் உறுதுணை புரிகிறது, இந்த கலந்துரையாடல்கள் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகள் மூலமாக, கிடைக்கப்பெறும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, இக்குழுமம் கொள்கைகளை உருவாக்குகிறது மற்றும் தொடர்புடைய துறைகள் புதிய கொள்கை முன்னெடுப்புகளை உருவாக்குவதற்காக சிறந்த பரிந்துரைகளையும் அளித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த பரிந்துரைகள் அரசுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.
ஆராய்ச்சிகள் மற்றும் அறிவு திறன் பகிர்வு
இக்குழுமம் இதனுடன் தொடர்புடைய துறைகளால் செயல்படுத்தப்படும் முன்னோடி திட்டங்களை மதிப்பீடு செய்வதுடன் அவற்றின் தாக்கங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்வதில் ஈடுபடுகிறது. இந்த செயல்பாடுகளின் நோக்கமானது, இத்தகைய முன்னோடி திட்டங்களை செயல்படுத்தும் போது ஏற்படக்கூடிய இடையூறுகளையும் இறுதி கட்ட சவால்களையும் கண்டறிதல். தேவைப்படும் நிகழ்வில், இந்த மதிப்பீட்டாய்வில் கிடைக்கப்பெறும் அனுமானங்களைக் கொண்டு, இந்த திட்டங்கள் மக்களுக்கு மேலும் சிறப்பாக பயனளிக்கும் வகையில், தேவைக்கேற்ப மறுவடிவமைப்பு செய்யப்படுகிறது. மேலும், ,பேசும் பொருளாகும் கருத்துகளின்மீது, பங்காளர் துறைகள் மற்றும் வல்லுநர்களைக் கொண்டு பணிப்பட்டறைகளும் நடத்தப்படுகிறது.
தலைமைச் செயலகத் துறைகளும் மற்றும் அவற்றின் கீழ் இயங்கும் துறைத் தலைமைகளும்
இக்குழுமம், கீழ்க்குறிப்பிட்டுள்ள தலைமைச் செயலகத்துறைகள் மற்றும் துறைத்தலைமைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.
பள்ளிக்கல்வித் துறை
- பள்ளிக்கல்வி இயக்குநரகம்
- தொடக்கக்கல்வி இயக்குநரகம்
- மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்குநரகம்
- பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகம்
- சமக்கிரசிக் ஷா
- மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
- தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம்
- பொது நூலக இயக்ககம்
- தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம்
- தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்
உயர் கல்வித் துறை
- தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்
- கல்லூரிக் கல்வி இயக்ககம்
- ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி
- தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்
- தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கல்வி மன்றம்
- மாநில திட்ட இயக்குநரகம் – ரூசா
- தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம்
- தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம்
- தமிழ்நாடு மாநில உருது அகடெமி
- அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து பல்கலைக்கழகங்கள்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் வளர்ப்பு துறை
- தொழிலாளர் ஆணையரகம்
- வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்ககம்
- தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம்
- மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (ஈஎஸ்ஐ)
- தொழிலாளர் கல்வி நிறுவனம்
- தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம்
- கட்டுமான பணியாளர்கள் நல வாரியம்
சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை
- சுற்றுலா இயக்குநரகம்
- தொல்லியல் இயக்குநரகம்
- அரசு அருங்காட்சியக இயக்குநரகம்
- கலை மற்றும் பண்பாடு இயக்ககம்
- இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை இயக்ககம்
- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
- தேசிய மாணவர் படை
- தமிழ்நாடு உடற் கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம்
தமிழ் வளர்ச்சி மற்றும் மக்கள் தொடர்பு துறை
- தமிழ் வளர்ச்சி இயக்ககம்
- செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்
- செய்தி – மக்கள் தொடர்பு இயக்ககம்
- எழுது பொருள் மற்றும் அச்சுத் துறை இயக்ககம்
- உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
- தமிழ் பல்கலைக்கழகம்
- தமிழ் இணையக்கல்விக் கழகம்
சட்டத் துறை
- சட்டப்படிப்புகள் இயக்குநரகம்
- தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
மதிப்பீடுகள் & ஆய்வுகள்
Education Quality
Heritage
Literacy
Skill Enhancement
Vocational Education
தமிழ்நாட்டில் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்களின் (கலை, அறிவியல், பொறியியல் படிப்புகள்) பருவ -இறுதி வினாத்தாள்களின் மதிப்பீடு குறித்த ஆய்வு
மாநிலப் பல்கலைக் கழகங்களிலிருந்து பெறப்பட்ட கலை, அறிவியல் மற்றும் பொறியியல் பாடங்களின் வினாத்தாள்கள், திருத்தியமைக்கப்பட்ட ப்ளூம் ஸ்டாக்ஸானாமி (Bloom Taxonomy) முறைப்படி, எதிர்பார்க்கப்படும் கல்வித்தரத்தைப்Read More
இந்த ஆய்வறிக்கையின் சில முக்கிய பரிந்துரைகள் பின்வருமாறு
· வினாத்தாள்களின் தரம் பெரிய அளவில் மேம்படுத்தப்பட வேண்டும். பயன் சார்ந்த கல்வி ( Outcome Based Education (OBE) ) இன் முக்கியத்துவத்தைப் பற்றிய சரியான புரிதலுடன் பயன் சார்ந்த கல்வியை (OBE) செயல்படுத்த வேண்டும். · மாணவர்களின் கல்வி அறிவை மதிப்பிடவும் மேலும் அவர்கள் அறிவு சார்ந்த சிக்கலான அம்சங்களை புரிந்துக் கொள்வதற்காக, திருத்தியமைக்கப்பட்ட ப்ளூம் ஸ்டாக்ஸானாமி (Revised Bloom’s Taxonomy) எனப்படும் வினாத்தாள்களை வடிவமைப்பதற்கான வரையறைகளின் படி, வினாத்தாள்களை வடிவமைக்க தேர்வாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.· ஒவ்வொரு இளநிலை படிப்பிற்கும் (இளங்கலைப் பட்டப்படிப்பு) பொதுவான திறன்கள் (பட்டதாரி பண்புக்கூறுகள்) அடையாளம் காணப்பட வேண்டும், ஒவ்வொரு இளநிலை படிப்பிற்கும் நிபுணர் குழுக்களின் உதவியுடன் அப்படிப்பிற்கான மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன் அல்லது பட்டதாரி பண்புகளுக்கான அளவுகோலை உருவாக்க வேண்டும். இதற்கு சர்வதேச நிபுணர்களின் பங்களிப்பையும் பெறுவதுடன் புலம்பெயர் கல்வியாளர்களையும் ஒருங்கிணைத்து, துறைசார் குழுக்கள் உருவாக்கப்படுவது பயனளிக்கத்தக்கதாக இருக்கும்.· தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகளால் தயாரிக்கப்படும் வினாத்தாள்களும் உரிய காலமுறையில் தொடர்ந்து தணிக்கை செய்யப்பட்டு மதிப்பீடு செய்யப்படுதல் வேண்டும். வினாத்தாள்கள் வடிவமைப்பதில், சிறந்த செயல்பாடுகளைக் கண்டறிந்து, அதனை உணர்ந்து, அதே போன்று இதர பல்கலைக்கழகங்களும் அதனை பின்பற்றிட ஊக்கப்படுத்தப்படுத்துதல் வேண்டும்.
Characterisation of ancient mortar and simulation of new mortar at Naganathaswamy Temple, Kumbakonam and Thanjavur Palace for Restoration
This study focuses on ancient monuments, defining them as structures of historical, archaeological, or artistic significance existing for over 100 years. Read More
வேலூர் மாவட்டத்தை பிரத்யேக நேர்வாகக் கொண்டு, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஊரகப் பகுதிகளில் மாணவர்களின் கல்வி இடைநிற்றல் குறித்த ஓர் ஆராய்வு
கல்வி, பொது அறிவு மற்றும் எழுத்தறிவு ஆகியவற்றிற்கு அதிக அளவில் முக்கியத்துவம் அளித்து வந்தாலும், மாணாக்கர்களின் பள்ளி இடைநிற்றல் ஒரு பெரும் சவாலாகவே அரசுக்கு உள்ளது. பள்ளி இடைநிற்றல் என்பது ஆங்காங்கே ஒரு தொடர் நிகழ்வாக நடைபெற்றுக் கொண்டு வந்து, இறுதியில் அதன் விளைவு ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் பள்ளி இடைநிற்றலுக்கு Read More
இவ்வாய்வில், மக்கள் தொகையின் பல்வேறு கூறுகளையும், கல்வி இடைநிற்றலுக்கான காரணிகளையும் கண்டறிவதுடன்,மேல்நிலைப் பள்ளிகளில் மாணக்கர் சேர்க்கை விகிதம், பள்ளி இடைநிற்றல் விகிதம் ஆகியவையும் கண்டறியப்பட்டு, பள்ளி இடைநிற்றல் நிகழ்வுகளில், பல்வேறு பகுதிகளுக்கிடையே காணப்படும் மாறுபாடுகள் மற்றும் சமூகப் பொருளாதார காரணிகளின் தொடர்புகளும் ஆராயப்பட்டது. இவ்வாய்வின் முக்கிய அனுமானங்களாவன, பள்ளி இடைநிற்றலுக்கு ஆளான பெரும்பாலான மாணாக்கர்களின் பெற்றோர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாகவும் கூலித் தொழிலாளிகளாகவும் உள்ளனர், கல்வி கற்றலுக்கான விருப்பமின்மை மற்றும் உடல் நலன் ஆகியன பள்ளி இடைநிற்றலில் பிரதான காரணிகளாக உள்ளது., பெண் குழந்தைகள் கல்வி கற்றல் குறித்து, பெற்றோர்களுக்கு உள்ள எதிர்மறையான மற்றும் வித்தியாசமான மனப்பாங்கே, பெண் குழந்தைகள் பள்ளி இடைநிற்றலுக்கான பிரதான காரணியாக உள்ளது மற்றும் சமூக மாற்றங்களை ஏற்றுக் கொள்வதில் குறைபாடு மற்றும் பள்ளிக்கூட சூழ்நிலையில் இணக்கமாக செல்ல இயலாத நிலையும் கூட கல்வி இடைநிற்றலில் ஒரு முக்கிய காரணியாக உள்ளது.
தமிழ்நாட்டில் சமுதாயக் கல்லலூரிகள் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரிகளை பிரத்யேக நேர்வாகக் கொண்டு, ஒரு மதிப்பீட்டாய்வு
சமுதாயக் கல்லூரிகளானது, கல்வி கற்பதற்கு அனுகூலமற்ற பிரிவினருக்கும் பின்தங்கிய பிரிவினருக்கும் கல்வியின் மூலம் அதிகாரமளிக்கும் ஒரு மாற்றுக் கல்வி முறைமையாகும். உள்ளூர் தொழிற் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் சமுதாய நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்படும் சமூதாயக் கல்லூரிகள் மூலமாக நலிவுற்ற, பின்தங்கிய பிரிவினர் ஒவ்வொருவருக்கும் Read More
Study on Socio-Economic Backwardness and its linkage with literacy level in Villupuram district
This study focuses on the Villupuram district in Tamil Nadu, which ranks third lowest in literacy and second lowest in Human Development Index in the State, according to Census 2011. It explores the impact of socio-economic Read More
பயிலரங்கம்
Education Quality
Heritage Conservation
Literacy
Skill Enhancement
Vocational Education
கணினி அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆராய்ச்சி மேற்கொள்ள கேள்வித்தாள் மற்றும் தரவு கைப்பற்றுதல் மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றை உருவாக்குதல்
உயர்கல்வி மற்றும் கல்வித்துறையில், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து தரவு பகுப்பாய்வில் ஈடுபடுகின்றனர். இப்பணிக்கு வளர்ந்து வரும் தரவு அறிவியல் அதிக அளவில் பயன்படுகிறது. தரவு பகுப்பாய்வு நுட்பங்களின் எழுச்சியானது விரைந்து பணிகளை செய்ய உதவுகிறது. தரவு சேகரிப்பு முதல், அறிவு உருவாக்கம் வரை திட்டங்களில் Read More
உயர்கல்வி நிறுவனங்களில் தர மேம்பாடு
21 ஆம் நூற்றாண்டில், மனித மூலதனத்தை உருவாக்குவதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது, தனிப்பட்ட மற்றும் சமூக வளர்ச்சிக்கு முக்கியமான ஒரு மாறும் நிகழ்வாக செயல்படுகிறது. இந்த பயிலரங்கமானது மாநிலத்தில் உயர்கல்வியின் செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது, விளைவு அடிப்படையிலான கல்வியில் (OBE) கவனம் செலுத்துகிறது. Read More
தமிழ்நாட்டின் சுற்றுலாத் துறையில் சாத்தியமான மற்றும் வாய்ப்புகள்
சுற்றுலா – அதன் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் கலாச்சார பரிமாற்ற நன்மைகளுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது – தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு கருவியாக செயல்படுகிறது. தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறையில் உள்ள வாய்ப்புகள் மற்றும் வாய்ப்புகளை ஆராய, மாநில திட்டக்குழு ஒரு பயிலரங்கை ஏற்பாடு செய்தது. Read More
Role of State Council of Educational Research & Training (SCERT) on Educational Reforms in Tamil Nadu
The State Government’s vision to enhance teacher capacity building, research, and development for improved school education quality is carried out through the State Council of Educational Research and Training (SCERT). The workshop focused on gaining insights into the functions and activities of SCERT. Workshop recommendations advocate the introduction of a six-month internship program for DTEd., (akin to medical house surgeons) aimed at addressing teacher shortages in challenging terrains.An ICT Read More
The role of Non-Formal Education in Total Literacy in Tamil Nadu
Literacy is at the heart of basic education and of all human capabilities. This workshop by the Planning Commission sought to highlight key themes and opportunities in this domain. A few of the recommendations following this workshop include the Non-Formal & Adult Education Department designing equivalent programs for the III, V, and VIII standard levels of the formal school system in collaboration with National/State Open School. The department is encouraged to explore involving Corporate/Public Sectors and Industries Read More
Broad Basing Sports activity by Sports Development Authority of Tamil Nadu (SDAT)
SDAT oversees government sports policies, while the Tamil Nadu Physical Education and Sports University (TNPESU) focuses on promoting physical education and sports. A seminar on “Broad Basing Sports in Tamil Nadu” was conducted by the State Planning Commission, to highlight the significance of physical activity and sports. Based on this workshop, recommendations by the State Planning Commission include the establishment of exclusive sports schools in each district with integrated academic systems and world-class training Read More
நடந்து கொண்டிருக்கும் வேலை
Current Studies/Assessments of Schemes
- Early Career Trajectory – ITI & Polytechnic Students in Tamil Nadu
- Work Force Participation of Women in Tamil Nadu
- Evaluation of the scheme “Ennum Ezhuththum” – Analysis of school education data on the performance of teachers and students in the primary classes of Government schools in Tamil Nadu