ஜல் ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட தாக்கத்தை மதிப்பிடுதல்

அறிமுகம்

தமிழ்நாடு அரசு, மாநிலத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் குறிப்பாக கிராமபுறங்களில் குடிநீர்க்குழாய் இணைப்பு வழங்குவதை உறுதி செய்வதற்கான தீர்மானிபடர்புடைய துறைகள் வாயிலாக மேற்கொண்டு வருகிறது.  குடிநீர்க்குழாய் இணைப்புகளைப் பெற்றுள்ள வீடுகள் குறித்த ஜல் ஜீவன் இயக்கத்தின்    தற்போதைய தரவுகளின்படி, தமிழ்நாட்டில் வெற்றிகரமாக 78.19% வீடுகளுக்கு குடிநீர்க்குழாய் இணைப்புகளை வழங்கப்பட்டுள்ளது. 

மாநில திட்டக்குழு, கிராமபுறங்களில் ஜல் ஜீவன் இயக்கத்தை செயல்படுத்துவதனால் ஏற்படும் தாக்கம் மற்றும் அதன் செயல்திறன் பற்றிய விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ளும் பணியை 2022 ஆம் ஆண்டு தொடங்கியது.

இந்த ஆய்வானது, கிராமபுறங்களில் குடிநீர்க்குழாய் பயன்பாட்டை வழங்குவதில் உள்ள இடர்பாடுகளைக் கண்டறிவது, கிராமப்புற வீடுகளில் குழாய்க்குடிநீர் வழங்கும் அளவை மதிப்பிடுவது, சுகாதாரத்தின் மீதான அதன் தாக்கத்தை பகுப்பாய்வு செய்வது, கிராமப்புறங்களில் குடிநீர் வழங்கும் முறை மற்றும் தூய்மையை மதிப்பிடுவது மற்றும் குடிநீர்க்குழாய் மூலம் வழங்கப்படும் நீர் பயன்பாட்டின் நிலையை அறிவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

புவியியல் ரீதியாக மாறுபட்ட நான்கு வெவ்வேறு இடங்கள் இக்கணக்கெடுப்பிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கணக்கெடுப்பின் தற்போதைய நிலை

வினாப்பட்டியலை சீரமைக்கவும், கணக்கெடுப்பு நடைபெறும் இடங்களில் நீர் தொடர்பான சவால்களை அறியவும் ஒரு முன்னோடி கணக்கெடுப்பு நடைபெற்றது.