திட்ட ஒருங்கிணைப்பு குழுமம்

முக்கிய செயல்பாடுகள்

ஒருங்கிணைப்பு 

             தமிழ்நாடு புத்தாக்க  முயற்சிகள் திட்டத்தினை (TANII)  சீராக செயல்படுத்துவதை உறுதி செயதல், திட்ட முன்மொழிவுகளை மதிப்பீடு செய்வதற்காக தொடர்புடைய அரசு துறைகளை ஒருங்கிணைத்து  உயர்மட்ட குழு கூட்டங்கள் நடத்துதல்.

            பொருளாதாரம்,புள்ளியியல், நிதி வளங்கள், ஆளுகை மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில்    சிக்கல்கள் மற்றும் சவால்களைப் புரிந்துகொள்வதற்கும் தீர்வு காண்பதற்கும் சம்பந்தப்பட்ட துறைகளுடன் துறை சார்ந்த விவாதங்கள் நடத்துதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல்.

       மதிப்பீடு மற்றும்  செயல்முறை ஆராய்ச்சித் துறையுடன்  இணைந்து  மாநில மதிப்பீடு மற்றும் ஆலோசனைக் குழு (SEAB) கூட்டங்கள் மற்றும் விவாதங்களை நடத்துதல்.

                   துணைத் தலைவர் மற்றும்  மாநில திட்ட குழுவின் உறுப்பினர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான கூட்டங்கள்  நடத்துதல்.

Sectoral Discussions

The Vertical organizes sector-specific discussions with the relevant departments to understand and address the issues and challenges pertaining to the Economic Advice and Statistics, Financial Resources, Governance and Innovation sectors. Planning Commission members contribute valuable insights and advocate for optimal practices, and these recommendations are then presented to the Government for thoughtful consideration.

ஆராய்ச்சி மற்றும் அறிவு பகிர்வு

திட்ட ஒருங்கிணைப்பு குழுமம்,  துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை எளிதாக்குகிறது.  தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி முறையை ஆய்வு செய்வதற்காக, பொருளாதாரத்தின்  முக்கிய பங்குதாரர்கள் மற்றும் நிபுணர்களை ஒன்றிணைக்கும்   கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகளை நடத்துகிறது.

திட்ட ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைக்கும் துறைகள்

திட்ட ஒருங்கிணைப்பு குழுமம் ஒருங்கிணைக்கும் துறைகள் பின்வருமாறு:

நிதித் துறை
  • கரூவூலக் கணக்குத் துறை
  • உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை
  • சிறு சேமிப்புத் துறை
  • அரசு தகவல் தொகுப்பு விவர மையம்
  • கூட்டுறவு தணிக்கைத் துறை
  • தலைமை அரசுத்துறை நிறுவனத் தணிக்கைத்துறை
  • ஓய்வூதிய இயக்ககம்
திட்டம் , வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை
  • மாநில திட்டக் குழு,
  • பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை
  • மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை
உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை
  • காவல்
  • தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்
  • தடய அறிவியல்
  • சிறைச்சாலைகள்
  • போக்குவரத்து
  • நீதிமன்றங்கள்
  • சினிமா
  • குடியுரிமை
  • குற்ற வழக்கு தொடர்தல் (PROSECUTION)
  • மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரகம்
  • மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு
  • தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்)
  • போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு
பொதுத்துறை
  • மாநில மனித உரிமைகள் ஆணையம்
  • தமிழ்நாடு ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்
  • அரசு விருந்தினர் இல்லம் மற்றும் அரசு ஓய்வு இல்லம், உதகமண்டலத்தில் உள்ள தமிழகம் விருந்தினர் இல்லம் மற்றும் புதுதில்லியிலுள்ள தமிழ்நாடு இல்லம் மற்றும் கூடுதல் தமிழ்நாடு இல்லம் ஆகியவற்றை நிர்வகித்தல்.
  • முன்னாள் படைவீரர்கள் நலன், அவர்களது குடும்ப நலன் மற்றும் முன்னாள் படைவீரர்கள் கழகத்தின் நிர்வாகம். (TEXCO)
  • முகாமில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருதல்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
  • வருவாய் நிருவாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிப்புத்துறை ஆணையரகம்.
  • நில நிருவாக ஆணையரகம்.
  • நிலச்சீர்த்திருத்த ஆணையரகம்.
  • நில அளவை மற்றும் நிலவரித் திட்ட ஆணையரகம்.
  • நகர்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி இயக்குநரகம்.
சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை
  • தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்
வணிக வரி மற்றும் பதிவுத்துறை
  • வணிக வரித் துறை
  • பதிவுத்துறை
மனித வள மேலாண்மைத் துறை
  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம்
  • தமிழ்நாடு  தகவல் ஆணையம்
  • தமிழ்நாடு மாநில விஜிலென்ஸ் கமிஷன்
  • ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம்

மதிப்பீட்டு ஆய்வுகள்

Public Finance
Economic Development
Rural Economy

Select2 Example

தமிழ்நாடு அரசின் திட்டச் செலவுகளுக்கு பகுப்பாய்வு செய்தல் மற்றும் திட்ட முன்னுரிமை அளித்தல்

தமிழ்நாடு அரசின்  பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும்  திட்டங்களின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கோடு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு மண்டல வளர்ச்சி முறைகள் ஆய்வு

தமிழ் நாட்டின் மண்டலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயான வளர்ச்சியில் உள்ள  ஏற்றத்தாழ்வுகளை  ஆராய்ந்து நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது.  மாவட்டங்களின் மொத்த மாவட்ட உள்நாட்டு உற்பத்தி (GDDP) அளவிடப்பட்டு மண்டல ஏற்றத்தாழ்வுகளை  விரிவாக விவரிக்கிறது. Read More

View File

தமிழ்நாட்டிற்கான பல் பரிமாண வறுமைக் குறியீடு

 தமிழ்நாட்டிற்கான விரிவான பல் பரிமாண குறியீட்டை உருவாக்கி, மாநிலத்தின்   வறுமை நிலைகளை மதிப்பிடுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 இல் வரையறுக்கப்பட்ட  முறைகள், இந்தியாவிற்கான MPI குறித்த NITI Aayog ன் அறிக்கைகளின் Read More

View File

தமிழ்நாட்டின் கிராமப்புற பல்வகைப்படுத்தல் மற்றும் சமூக பொருளாதார வேறுபாடு: - ஆய்வு முடிவுகள்

தமிழ்நாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு பங்களிக்கும் கிராமப்புற குடும்பங்களில் தற்போதுள்ள இடைவெளிகளைக் குறைப்பதை இந்த ஆய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.  தமிழ்நாட்டில் விவசாயம் முதன்மையான தொழிலாக இருப்பினும், பொருளாதாரத்தில் மாநிலத்தின் மொத்த Read More

View File

அகில இந்திய கடன் மற்றும் முதலீட்டு கணக்கெடுப்பு 2019 - தமிழ்நாடு தரவுகள் குறித்த ஆய்வு

அகில இந்திய கடன் மற்றும் முதலீட்டு கணக்கெடுப்பு 2019-ன் அடிப்படையில் இந்த ஆய்வு மாநிலத்திற்காக வெளியிடப்பட்டது. கிராமப்புறங்கள், நகர்ப்புறங்களில்  உள்ள குடும்பங்களின் கடன் தேவை, கடன் வழங்கல் , மொத்த கடன் மற்றும் முதலீடுகள் போன்ற முக்கியமான குறிகாட்டிகளை அளவிடுவதாகும்.இந்த ஆய்வின் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட தரவுத் தொகுப்புகள் விளக்கமான புள்ளி விவரங்களை வழங்குகிறது.

View File

தமிழ்நாட்டின் விவசாயக் குடும்பங்கள் ஒரு விவர ஆய்வு

மிழ்நாட்டின் விவசாய குடும்பங்கள் குறித்த தகவல்களின் களஞ்சியத்தை உருவாக்குவது இந்த ஆய்வின் நோக்கம்.  விவசாய குடும்பங்களின் நில உரிமை, சமூகம் , சமூகக் குழு, வேலைவாய்ப்பு, வசதிகளுக்கான அணுகல், வருமானம் மற்றும் செலவினங்கள் ஆகியன அடங்கும் இந்த ஆய்வு, கொள்கை வடிவமைப்பதற்கு உதவும்.

View File

செயல்திட்டம் 2035-முதல்நிலை, இடைநிலை மற்றும் சமூக வளர்ச்சி சார்ந்த துறைகளுக்கான செயல் திட்டங்கள் மற்றும் உத்திகள்

மாநிலத்திற்கான துறை சார்ந்த தொலைநோக்கு பார்வை மற்றும் வளர்ச்சிக்கான  வழிமுறைகளை உருவாக்கும் நோக்கத்துடன், இந்த ஆய்வு   நடத்தப்பட்டது. முதன்மை  துறைகளான வேளாண்  மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட துறைகள், இடைநிலை  துறைகள் எனப்படும் தொழில், போக்குவரத்து, மின்சாரம்  Read More

Primary-Sector View File
Secondary-Sector View File
Social-Sector View File

அரசின்கொள்கை வகுத்தலுக்காக தமிழக பொருளாதாரத்தை கண்காணித்தல்

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை கண்காணிக்க தொலைநோக்குப் பார்வையுடன், இந்த ஆய்வு எடுத்துக்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டு   நிதி நிலைமையை   மற்ற  மாநிலங்களின் நிதி நிலைமையை ஒப்பிட்டு ஆராய்ந்தது. இந்த பகுப்பாய்வு பல்வேறு  பொருளாதாரக் அளவீடுகளின் அடிப்படையில் Read More

View File

தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் திட்டம்

மாநிலத் திட்டக்குழு தமிழக அரசின் உயர்மட்ட ஆலோசனைக் குழுவாக இருப்பதுடன், அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்களின் புதுமையை புகுத்துதலிலும், பொது சேவை   வழங்குதலின் தரத்திலும் ,  விரைவு தன்மையிலும்   புதுமைகளை புகுத்தி,  மேம்பட்ட சேவைகளை மக்களுக்கு வழங்கும்  சீரிய நோக்குடன்   2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.  இத்திட்டத்தின் மூலம், தமிழக அரசின் பல்வேறு அரசு துறைகள் மற்றும் அரசு சார் துறைகளின் சுமார் 400  புதுமையான முயற்சிகளுக்கு,  தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கிட  பரிந்துரை செய்துள்ளது.

TANII Operational Flow Chart Graphic

ஆளூகைக்கான புத்தாக்க மையம் (தமிழ்நாடு புத்தாக்க திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ளது)

அரசின் துறைகளின் மற்றும் மாவட்ட  நிருவாகத்தில்  புதுமைகளை  ஊக்குவிக்க  ஆளூகைக்கான  புத்தாக்க மையம்  ஏற்படுத்தப்பட உள்ளது.  இம்மையமானது அரசு துறைகளில் காணப்படும் சவால்கள் மற்றும் இடர்பாடுகளைக்    களைய  புதுமையான திட்டங்களை கண்டறிந்து   பொது சேவை அளிக்க  உறுதுணையாக  செயல்படும்.

இம்மையத்தின் இலக்கு, பங்குதாரர்கள் மற்றும் முயற்சிகள்

குறி இலக்குகள்:

பொது நிருவாகத்தில் புதுமை.

  • சிக்கல் மற்றும் சவால்களுக்கு புதுமையான முறையில் தீர்வுகள் கண்டறிதல் 

 சமூகங்களின் மீதான தாக்கம்.- 

  • சமூக பொருளாதார  சிக்கல்களுக்கு   புதுமையான  முறையில்  தீர்வு காணுதல்,   சிக்கல்களை  எதிர்க்கொள்ள ஆலோசனை வழங்குதல்.

அடிப்படை சிக்கல்களுக்கான தீர்வு:  

  • மாவட்டங்களின்  பிரத்யேக  தேவைகேற்ப  புதுமையான திட்டங்களை கண்டறிந்து   மாவட்ட  நிருவாகங்களுக்கு  தீர்வு காண உதவுதல்.

பங்களிப்பாளர்கள்:

  • தலைசிறந்த கல்வியாளர்கள் /கல்வித்துறை நிறுவனங்கள்,
  • ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள்,  
  • ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையங்கள் ( R&D)
  • தொழில்கள்
  • திறன் மையம்

முயற்சிகள்:

    புதுமையான தொழிற் நுட்பங்களை கொண்டுள்ள நிறுவனங்களோடு ஒருங்கிணைந்து,  அரசுத்துறைகளில் / மாவட்டங்களில் புதுமையான        நுட்பங்களை     பரவலாக்குதலுடன்   பின்வரும் முயற்சிகளை செயல்ப்படுத்தல் :

  • அரசு தொழில்நுட்பம்
  • மின்  ஆளுகை
  • புத்தொழில் புத்தாக்கம் 
  • ஹேக்கத்தான்கள்
  • திறன் மற்றும் திறன் மேம்பாடு
  • வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்
  • ஒத்துழைப்பு மற்றும் அறிவு பகிர்வு
  • பொது நிருவாகத்தில் சுமுக சூழலை உருவாக்கல் 
  • சமூக  மாற்றத்துக்கான  தொழில்நுட்பத்தை பரவலாக்குதல்

நடப்பு மற்றும் உத்தேச ஆய்வுப்பணிகள்

Current Studies/Assessments of Schemes
  • Impact Assessment study on Naan Mudhalvan Scheme
  • Assessment of GovTech Potential across Government departments in Tamil Nadu
  • Development of Regulatory Framework for GIG Economy in Tamil Nadu

செயல்பாடு தொகுப்பு