நீடித்த வளர்ச்சி
இலக்குகள்
அறிமுகம்
நீடித்த வளர்ச்சி இலக்குகள் ஆனது, 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் உச்சி மாநாட்டில் 193 உறுப்பு நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 01.01.2016 முதல் அமலுக்கு வந்த, உலகளாவிய வளர்ச்சித் திட்டத்திற்கான வரையறையாகும். இதில் உள்ள 17 இலக்குகள் மற்றும் 169 குறிக்கோள்களும், மக்கள், பூமி கோள் மற்றும் அவற்றின் செழிப்பின் நீடித்த வளர்ச்சிக்கான “உலகத்தை மாற்றுவோம் : 2030ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி திட்டம்” என்பதின் பகுதியாகும்.
நீடித்த வளர்ச்சி இலக்குகளை தமிழ்நாட்டில் செயல்படுத்துவதில், மாநில திட்டக்குழு, பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையுடன் இணைந்து, தொடர்புடைய துறைகளின் ஒருங்கிணைப்புடன் நீடித்த வளர்ச்சி இலக்குகளின் கீழ் வரும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றன இவை அனைத்தும் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் வழிகாட்டுதலின்பேரில் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படுகின்றன.
குறிக்கோள்
மாநிலத்திற்கான நீடித்த வளர்ச்சி இலக்குகள் திட்டம், ஐக்கிய நாடுகள் சபையால் நிர்ணயிக்கப்பட்டுள்ள உலகளாவிய குறிக்கோள்களுக்கு உட்பட்டு, வடிவமைக்கப்பட்டுள்ள மாநிலத்திற்கான குறிகாட்டி வரையாறைகளைக் கொண்டு கண்காணிக்கப்படுகிறது.மாநிலத்தின் ப்ரத்யேக சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல்களுக்கு தீர்வு அளித்திடும் வகையில் இந்த குறிகாட்டிகளை புகுத்துவதன் மூலம், நீடித்த வளர்ச்சி இலக்குகளை சிறந்த அணுகுமுறையில் அடைந்திடுவது உறுதி செய்யப்படுகிறது. இதன் குறிக்கோள்கள், மாநிலத்தில், வறுமை ஒழிப்பு, ஏற்றத்தாழ்வு, நீடித்த சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல்வாழ்வு ஆகிய அம்சங்களில் உள்ள ப்ரத்யேக சவால்களான எதிர்கொள்ள வழிவகை செய்கிறது. மாநில மக்களுக்கன தனித்துவமான தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை கருத்திற்கொண்டு செயல்படும்போது, உள்ளூர் அளவிலான செயல் உத்திகள் மற்றும் இடையீடுகள் மூலமாக, மாநிலத்தின் நீடித்த வளர்ச்சி இலக்கிற்கான செயல்திட்டம், உலகளாவிய வகையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம் மற்றும் நீடித்த எதிர்காலம் ஆகியவற்றை கட்டமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது.
நீடித்த வளர்ச்சி இலக்குகளில் மாநிலத்தின் முன்னேற்றம்
நீடித்த வளர்ச்சி இலக்குகளின் செயல்பாட்டில் தமிழ்நாடு மெச்சத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டு வருவதை, நித்தி ஆயோக் அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள நீடித்த வளர்ச்சி இலக்கு இந்திய தரவரிசைக் குறியீடு 3.0ன் வாயிலாக அறியலாம். இக்குறியீட்டில், தமிழ்நாடு 74 புள்ளிகளுடன் கேரளாவிற்கு அடுத்தபடியாக, இமாச்சல் பிரதேசத்துடன் இணைந்து தேசிய அளவில் இரண்டாம் இடம் வகிக்கின்றது. ஒட்டு மொத்த இலக்குகளில் இந்திய சராசரி மதிப்பெண் 66 ஆக உள்ளது. நீடித்த வளர்ச்சி இலக்கு இந்திய தரவரிசை குறியீடு 2.0 ல் பெற்றதை விட 7 புள்ளிகள் கூடுதலாக நீடித்த வளர்ச்சி இலக்கு இந்திய தரவரிசை குறியீடு 3,0ல் பெற்று மாநிலம் அதன் முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதை காணலாம்.
கண்காணிப்புக் குழு
மாநிலத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகளின் செயலாக்கத்தை மேற்பார்வையிடுவதற்காக 2017ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட மாநில அளவிலான உயர்மட்டக்குழு, 2022ஆம் ஆண்டில் மறுநிர்ணயம் செய்யப்பட்டது. மறுநிர்ணயம் செய்யப்பட்ட உயர்மட்டக்குழுவில், மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் அவர்கள் இக்குழுவின் இணைத் தலைவராகவும் உறுப்பினர் செயலாளர் அவர்கள் அதன் உறுப்பினராகவும் உள்ளனர். நீடித்த வளர்ச்சி இலக்கின் ஒவ்வொரு இலக்கும் அடையப்படுவதை உறுதி செய்திடும் முகமாக, எட்டு கருப்பொருள் சார்ந்த பணிக்குழுக்கள், இலக்குகளுக்கு தொடர்புடைய முகமைத் துறைகளின் செயலாளர்களை தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிக்குழுக்களில் இலக்குகளுக்கு தெடர்புடைய துறைகள் அதன் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தப் பணிக்குழுக்களுக்கான பணி வரையறைகளின்படி, அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. மாநிலத்தில் நீடித்த வளர்ச்சி இலக்ககளை அடைவதற்கும் அவற்றிற்கு தேவைப்படும் பணிகளை மேற்கொள்ளவதற்கும் திட்டமிட்ட முறையிலும் ஒருங்கிணைப்பான அணுகுமுறையிலும் மேற்கொள்வதற்காக மாநிலத்திட்டக்குழுவின் குழுமத் தலைவர்கள் அதன் உறுப்பினர் அமைப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.
உயர்நிலைக் குழு
S.No. | Secretary & Department | Position |
1. | அரசு தலைமைச் செயலாளர் | தலைவர் |
2. | துணைத் தலைவர், மாநிலத் திட்டக்குழு | இணைத் தலைவர் |
3. | அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை |
உறுப்பினர்-செயலர் |
4. | அரசு முதன்மைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை |
உறுப்பினர் |
5. | அரசு முதன்மைச் செயலாளர், மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை |
உறுப்பினர் |
6. | அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித் துறை |
உறுப்பினர் |
7. | அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை |
உறுப்பினர் |
8. | அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை |
உறுப்பினர் |
9. | அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை |
உறுப்பினர் |
10. | அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை |
உறுப்பினர் |
11. | வேளாண் உற்பத்தி ஆணையர் / அரசு செயலாளர், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை |
உறுப்பினர் |
12. | உறுப்பினர் செயலாளர், மாநிலத் திட்டக்குழு |
உறுப்பினர் |
அரசாணைகள்
அ.ஆ.எண்.14, திவ(ம)சிமு(மாதி.1) துறை, நாள் 21.03.2017 : மாநில அளவிலான உயர்மட்டக்குழு அமைத்தல் - எட்டு பணிக்குழுக்கள் உருவாக்குதல் -பணிக்குழுக்களுக்கான பணி வரையறைகள் - ஆணைகள் - தொடர்பாக.
அ.ஆ.எண்.108, திவ(ம)சிமு(மாதி.2) துறை, நாள் 30.09.2019 : நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்காக, அனைத்து துறைகளிலும் உரிய நடைமுறைகளையும் துறைகளின் கவனத்தினை ஒருமுகப்படுத்துவதற்காகவும் துறைகளில் நீடித்த வளர்ச்சி இலக்கு பிரிவுகள் உருவாக்குதல் - ஆணைகள் - தொடர்பாக.
அ.ஆ.எண்.109, திவ(ம)சிமு(மாதி.2) துறை, நாள் 30.09.2019 : நீடித்த வளர்ச்சி இலக்குகள் மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட வட்டாரங்கள், இதர வட்டடாரங்கள் மற்றும் மாவட்டங்களின் செயல்பாட்டினை தரவரிசைப்படுத்துதல் மற்றும் விருது வழங்குதல் - ஆணைகள் - தொடர்பாக.
அ.ஆ.எண்.122, திவ(ம)சிமு(மாதி.2) துறை, நாள் 18.12.2019 : நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்காக மாவட்ட அளவிலான உயர்மட்டக் குழு அமைத்தல், நீடித்த வளர்ச்சி இலக்கிற்கான மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்டங்களில் நீடித்த வளர்ச்சி இலக்கு பிரிவுகள் அமைத்தல் - ஆணைகள் - தொடர்பாக.
அ.ஆ.எண்.73, திவ(ம)சிமு(நீவஇ) துறை, நாள் 02.06.2022 : நீடித்த வளர்ச்சி இலக்கு மாநில அளவிலான உயர்மட்டக்குழு மறு நிர்ணயம் செய்தல் மற்றும் பணிக்குழுக்கள் மறு சீரமைத்தல் - ஆணைகள் - தொடர்பாக.