தமிழ்நாடு மாநில நில பயன்பாட்டு ஆராய்ச்சி வாரியம்

தமிழ்நாடு மாநில நில பயன்பாட்டு ஆராய்ச்சி வாரியம். நிலம் மற்றும் நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கவும், அவற்றின் நிலையான பயன்பாட்டை உறுதி செய்யவும், தொழில்நுட்பம், தரவு மற்றும் கல்வி நிறுவன அமைப்புகளுடன் செயல்படுகிறது.

நில பயன்பாட்டுத் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தில் நிகழ்நேரத் தகவலுக்கான வளர்ந்து வரும் தேவையை நிவர்த்தி செய்வதற்காக 2011-ல் நிறுவப்பட்டது. தமிழ்நாடு மாநில நில பயன்பாட்டு ஆராய்ச்சி வாரியம், மாநில திட்டக்குழுவிற்குள் ஒரு நிரந்தர அமைப்பாக செயல்படுகிறது.

தமிழ்நாடு மாநில நில பயன்பாட்டு ஆராய்ச்சி வாரியம், நவீன புவிசார் தொழில்நுட்பத்தை வழக்கமான முறைகளுடன் ஒருங்கிணைந்து தரவு சார்ந்த முடிவு ஆதரவு அமைப்பை உருவாக்குகிறது. ஒருங்கிணைந்த நில பயன்பாட்டுக்  கொள்கையை செயல்படுத்துவதும், நிலம் மற்றும் நீர் ஆதாரங்களின் நிலையான மேலாண்மையை மேம்படுத்துவதும் இவ்வாரியத்தின் நோக்கமாகும். மேலும், நிபுணத்துவ நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து இவ்வாரியம் கருத்தரங்குகள், பயிலரங்குகள் மற்றும் நிலப்பயன்பாடு தொடர்பான பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது