தொழில், மின்சாரம்
மற்றும் போக்குவரத்து

முக்கிய செயல்பாடுகள்

இக்குழுமம்,  தொழில், எரிசக்தி, நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறைசார் பிரிவுகளுக்கென, தனிப்பயனாக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் கொள்கைகளை (புதிய சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும், வாய்ப்புகளை உந்தி பயன்படுத்தும் விதமாகவும்) வடிவமைக்கிறது. மேலும், இத்துறைகளுடன் ஒருங்கிணைந்து, நுண்ணறிவார்ந்த சிந்தனைகள் மற்றும் பரிந்ததுரைகளை அரசிற்கு வழங்கி முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்க உதவுகிறது.

துறைசார் கலந்துரையாடல்கள்

இக்குழுமம்,  துறைசார் அலுவலர்களுடன் சீரான இடைவெளிகளில் கூட்டங்களை நடத்தி வருகிறது. மாநில (ம) மத்திய அரசுத்திட்டங்களின் முன்னேற்றத்தை அறிதல், சிறந்த நடைமுறைகளை பரிமாறிக்கொள்ளுதல், துறைசார் சவால்களை சுட்டிக்காட்டுதல் மற்றும் முன்னோக்கி செல்வதற்கான உத்திகளை வடிவமைத்தல் போன்ற நோக்கங்களுடன் இக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் வழங்கும் மதிப்புமிக்க நுண்ணறிவார்ந்த சிந்தனைகள் மற்றும் உகந்த நடைமுறை ஆலோசனைகள் அரசின் பரிசீலணைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

ஆராய்ச்சி மற்றும் அறிவு பகிர்வு

இக்குழுமம்,  ஆராய்ச்சி பணிகளை உள்-ஆய்வாகவும், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூலமாகவும் நடத்துகிறது.  இந்த ஆராய்வுகள், தொழில், எரிசக்தி, போக்குவரத்து போன்ற துறைசார் பிரிவுகளில் புதிதாக ஏற்படும் பிரச்சினைகள், இடையூறுகள் ஆகியவை குறித்தும், பல்வேறு கொள்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களின் தாக்கங்கள் குறித்தும் மேற்கொள்ளப்படுகின்றன.

இத்துறைசார் களங்களிலுள்ள முக்கிய பங்குதாரர்கள் மற்றும் வல்லுநர்களை ஒன்றிணைக்கும் கருத்தரங்கங்களையும் இக்குழுமம் நடத்தி வருகிறது.

துறைகள்

இக்குழுமம், கீழ்க்கண்ட தலைமைச் செயலகத் துறைகள் மற்றும் துறைத் தலைமையகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது :

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகம் (IIPC)
  •     வழிகாட்டி நிறுவனம் (GUIDANCE)
  •     தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (SIPCOT)
  •     தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO)
  •     தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC)
  •     தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (TNPL)
  •     தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் (TANCEM)
  •     தமிழ்நாடு உப்பு நிறுவனம்
  •     புவியியல் மற்றும் சுரங்கத்துறை
  •     தமிழ்நாடு கனிம நிறுவனம் (TAMIN)
  •     தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் (TANMAG)
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME)
  •     தொழில் வணிக ஆணையரகம்
  •     தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (TANSIDCO)
  •     தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனம் (TANSI)
  •     தமிழ்நாடு தொழில்முனைவோர்  மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII)
  •     தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் வசதியாக்கல்  நிறுவனம் (FaMe TN)
  •     தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (Startup TN)
கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் (HHTK)
  •     கைத்தறி துறை
  •     துணிநூல் துறை
  •     பட்டு வளர்ச்சித் துறை
  •     தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம்
  •     தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்
  •     தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (கோ-ஆப்டெக்ஸ்)
  •     தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியம்
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் (IT&DS)
  • தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (ELCOT)
  • தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA)
  • தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் (TACTV)
  • தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET)
  • தமிழ் இணையக் கல்விக்கழகம் (TVA)
  • தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனம் (ICT Academy)
எரிசக்தி (Energy)
  •     தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO)
  •     தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் (TANTRANSCO)
  •     தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (TEDA)
  •     தமிழ்நாடு மின் ஆய்வுத்துறை (TNEI)
  •     தமிழ்நாடு மின்விசை நிதி (ம) அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம்
நெடுஞ்சாலைகள் & சிறு துறைமுகங்கள் (Highways & Minor Ports)
  • நெடுஞ்சாலை முதன்மை இயக்குநர் அலுவலகம்
  • நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம்
  • தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம்-II
  • தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் (TNRDC)
  • தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (TNRIDC)
  • தமிழ்நாடு கடல்சார் வாரியம்
  • பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம்
போக்குவரத்து துறை (Transport)
போக்குவரத்து கழகங்கள் (TNSTC)
  • மாநகர போக்குவரத்து கழகம், சென்னை (MTC)
  • அரசு விரைவு போக்குவரத்து கழகம் (SETC)
  • அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம்
  • அரசு போக்குவரத்து கழகம், சேலம்
  • அரசு போக்குவரத்து கழகம், கோயம்புத்தூர்
  • அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம்
  • அரசு போக்குவரத்து கழகம், மதுரை
  • அரசு போக்குவரத்து கழகம், திருநெல்வேலி
இதர நிறுவனங்கள்
  • சாலை போக்குவரத்து நிறுவனம் (IRT)
  • பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக்குழு (PTCS)
  • தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை((MVMD)
  • தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம்  (TDFC)

மதிப்பீடுகள் & ஆய்வுகள்

கோவிட்-19 காலத்தில் தொழில் நடத்துவதற்கான உத்திகள் - குறு, சிறு (ம) நடுத்தரத் தொழில் நிறுவனங்களை புத்துயிரூட்டுவதற்கான ஒரு வினையூக்கி

இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய தூணாக திகழும் குறு, சிறு (ம) நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டன.  தமிழ்நாட்டிலுள்ள சுமார் 22 லட்சம் MSMEகள், சுமார் 100 லட்சம் பேருக்கு விவசாயம் அல்லாத வேலைவாய்ப்பை Read More

View File

தமிழ்நாட்டில் பெரிய பன்னோக்கு பயன்பாடு கொண்ட துறைமுகம் அமைப்பதற்கான முதனிலை சாத்தியகூறுகள் ஆய்வு

மின்பற்றாக்குறையால் தவித்து வந்த தமிழ்நாடு, மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்கும் விதமாக தொலைநோக்கு திட்டம் 2023ல், அனல்மின் ஆற்றல் மூலம் 20,000 MW மின் உற்பத்தியும், இரண்டு LNG முனையமும்  அமைத்திட திட்டமிட்டது. இது தொடர்பாக, மாநிலத் திட்டக்குழுவும், சென்னை வர்த்தக மற்றும் தொழில் Read More

View File

குறு, சிறு (ம) நடுத்தர நிறுவனங்களை மாவட்ட அளவில் ஒருங்கிணைத்தல் - முன்னோடித் திட்டம்

மாவட்ட அளவில் குறு, சிறு (ம) நடுத்தர நிறுவனங்ககளின் பொருளாதார செயல்பாடுகளை, நிகழ்நேர தரவு பரிமாற்றத்தின் அடிப்படையிலான இடையீடுகளுடன் முறையாக ஒருங்கிணைப்பது என்ற நோக்கத்துடன் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. Read More

View File

சூரியசக்தி நீர்உந்திகளைப் பயன்படுத்துவதால் தமிழ்நாட்டின் வேளாண்மையில் ஏற்படும் தாக்கம்

தமிழ்நாட்டில், ஏறக்குறைய 12,000 கிராமங்கள் விவசாயத்தை மட்டும்  நம்பியிருக்கும் நிலையில், நீர்உந்திகளுக்கு மின் விநியோகம் செய்வதில் சவால்கள் எதிர்கொள்ளப்பட்டு வருகிறது. சில பகுதிகள், குறிப்பாக காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கால்வாய் பாசனத்தால் நல்ல சாகுபடி Read More

View File

கருத்தரங்குகள்

புதிதாக தோன்றும் பிரச்சினைகள், உடனடித் இடையீடுகள் மற்றும் கவனம் தேவைப்படும் பொருண்மைகள், புதிய கருப்பொருட்கள் போன்றவற்றின் அடிப்படையில் துறைசார் கருத்தரங்கு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கருத்தரங்குகளின் பரிந்துரைகள் உரிய நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளுக்கு அனுப்பப்படுகின்றன. இக்குழுமத்தால் நடத்தப்பட்ட சில கருத்தரங்குகள்:

தமிழ்நாட்டில் வேளாண் பண்ணைகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி - சாத்தியங்கள் மற்றும் சவால்கள்

அதிகரித்து வரும் மின்சாரத் தேவை, விலையேற்றம் மற்றும் பாசனத்திற்காக நிலத்தடி நீரை அதிகளவில் நம்பியுள்ள விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டிய அதே வேளையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) மின் தேவைகளை பூர்த்தி செய்ய அதிக நெருக்கடிகளை Read More

வேளாண்மை மற்றும் வேளாண் மதிப்புக்கூட்டல் தொழில்களில் சூரிய சக்தியின் பயன்பாடு

தமிழ்நாட்டின் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு, எரிசக்தி முக்கிய ஆதாரமாக உள்ளது. இப்பகுதியிலுள்ள, அபரிமிதமான சூரிய சக்தி,  வேளாண்மை மற்றும் வேளாண் மதிப்புகூட்டலில் சூரிய சக்தியை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்திக்கான குறிப்பிடத்தக்க ஆற்றலை Read More

View File

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் தொழில் வாய்ப்பு

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் தொழில்களுக்கான வாய்ப்புகள் என்ற கருத்தினை மையமாக வைத்து ஒரு கருத்தரங்கினை மாநிலத் திட்டக் குழு நடத்தியது. இம்மாவட்டங்களில், தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து தீர்வு காண்பதை Read More

View File

நடப்பு மற்றும் உத்தேச ஆய்வுப்பணிகள்

Current Studies/Assessments of Schemes
  • தமிழ்நாட்டில் தட்ப இதமாக்கல்  (District Cooling System) திட்டங்களின் இயல்திறன்பற்றிய சாத்தியக்கூறு ஆய்வு
  • மாறிவரும் பணிகளின் தன்மைதமிழ்நாட்டில் மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் மண்டல வளர்ச்சியின் மீதான தாக்கம்பற்றியஆய்வு
  • தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப் சூழலமைப்பு: வாய்ப்புகள் மற்றும் சவால்கள்”  பற்றிய ஆய்வு
  • சிறந்த பொது போக்குவரத்து முறையை செயல்படுத்துவதற்கான கூடுதல் நிதி ஆதாரங்களை கண்டறிவதுபற்றிய ஆய்வு

செயல்பாடு தொகுப்பு