சமூக நலக் குழுமம்
நலவாழ்வு மற்றும் சமூக
நலக் குழுமம்
முக்கிய பணிகள்
மதிப்பீடுகள், ஆய்வுகள், திறன்-வளர்ப்பு முயற்சிகள், அறிவுப் பரிமாற்ற விவாதங்கள், கொள்கை உரையாடல்களில் பங்கேற்பது மற்றும் உடல்நலம், குடும்ப நலம் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் நலன் தொடர்பான ஆக்கப்பூர்வ திட்டங்களை உருவாக்குவதற்காக தொடர்புடைய துறைகளுடன் கலந்தாலோசித்தல் ஆகிய செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
துறை சார்ந்த கலந்தாய்வுகள்
மாநில மற்றும் மத்திய அரசின் முதன்மைத் திட்டங்களில் உள்ள நிகழ்கால முன்னேற்றங்களுடன் அதனை செயல்படுத்தும் பொறுப்புடைய மற்றும் தொடர்புடைய பங்குதாரர்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்களுடன் தொடர்புகளை பல்வேறு கலந்தாய்வுகள், கருத்துப்பட்டறைகளை மேற்கொண்டு எளிதமைத்து வருகிறது. இந்த விவாதங்கள் துறை சார்ந்த சவால்களை அடையாளம் காண்பது, சிறந்த தாக்கத்தை ஏற்படுத்திய முன் மாதிரி நடைமுறைகளின் பகிர்வுகள் மற்றும் எதிர்காலத்திற்கான யுக்திகளை திட்டமிடல் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. மாநில திட்டக் குழுவின் உறுப்பினர்கள் கருத்துக்களை வழங்கி உகந்த நடைமுறைகளை முன் மொழிகிறார்கள் மற்றும் அங்கீகரிக்கிறார்கள். மேலும் அவர்களின் பங்களிப்புடனான பரிந்துரைகள், ஆய்வுகள், மதிப்பீடுகள் தொகுக்கப்பட்டு கொள்கைகளாக அரசிற்கு வழங்கப்படுகின்றன.
ஆய்வுகள் மற்றும் கருத்து பகிர்வு
நலவாழ்வு மற்றும் சமூக நலத்துறையில் ஏற்படும் சவால்கள் மற்றும் சிக்கல்களை ஆழ்ந்து நோக்கி தீர்வு காண்பதற்கு ஆய்வு நிறுவனங்களுக்கு பொறுப்பளித்து அல்லது அவர்களுடன் இணைந்து கூட்டு ஆய்வுகளை மேற்கொண்டு இந்த குழுமம் செயல்படுகிறது. இவ்வாறான முயற்சிகள் வாயிலாக சமூகத்தில் நலிவடைந்துள்ள பிரிவினரின் முன்னேற்றத்திற்கான முதன்மையான திட்டங்கள், கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள இடைவெளிகளையும் சவால்களையும் கண்டறிவதில் கவனம் செலுத்துகிறது.
துறைகள் மற்றும் இயக்குனரகங்கள்
இந்த குழுமம் பின்வரும் அரசு துறைகள் மற்றும் இயக்குநரகங்கள் மற்றும் அவற்றின் துணை அமைப்புகளோடு செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிறது:
மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை
- பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை இயக்குனரகம்
- மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குனரகம்
- மருத்துவக் கல்வி மற்றும் ஆய்வுகள் இயக்குனரகம்
- நலவாழ்வு மற்றும் குடும்ப நல இயக்குனரகம்
- இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவ இயக்குனரகம்
- தேசிய நலவாழ்வு பணி- தமிழ்நாடு மற்றும் மாநில நலவாழ்வு சங்கம்
- தமிழ்நாடு சுகாதாரத் துறை சீர்திருத்தத் திட்டம்
- மாநில சுகாதார போக்குவரத்து இயக்குனரகம்
- தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம்
- தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம்
- உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக இயக்குனரகம்
- மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம்
- தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை
- சமூக நல இயக்குனரகம்
- சமூகப் பாதுகாப்பு இயக்குனரகம்
- ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவைகள் திட்ட இயக்குனரகம்
- தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்
- தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
- ஆதி திராவிடர் நல இயக்குனரகம்
- பழங்குடியினர் நல இயக்குனரகம்
- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம்
- தமிழ்நாடு மாநில பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான ஆணையம்
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
- பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குனரகம்
- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குனரகம்
- மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குனரகம்
- சிறுபான்மையினர் நல இயக்குனரகம்
- தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
- தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
மாற்றுத் திறனாளிகள் நலத் துறை
- மாற்றுத் திறனாளிகள் நல இயக்குனரகம்
குழுமம் மேற்கொண்ட சில மதிப்பீடுகள் மற்றும் ஆய்வுகள்
Public Health
Maternal and Child Health
Tribal Issues
Nutrition
Disabilities and Health
Elderly Healthcare
AYUSH and Alternative Medicine
Social Welfare and Development
தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின கிராமங்களில் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த செயல்திறன் மதிப்பீட்டு ஆய்வு
பழங்குடியினர் நலனுக்காக செயல்படுத்தப்படும் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டங்களின் நோக்கம் சமூதாயத்தில் பழங்குடியினருக்கும் மற்றும் பிற சமுகத்தினருக்கும் உள்ள வளர்ச்சி இடைவெளியை குறைப்பதாகும், இந்த ஆய்வானது பழங்குடியின மக்களின் வாழ்வில் பல்வேறு Read More
தமிழ்நாட்டில் குழந்தைகளின் முதல் 1000 நாட்களில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் விளைவுகள் குறித்த பிரத்யேக குறிப்புரை
முதல் 1000 நாட்கள்: குழந்தை வளர்ச்சிக்கான ஒரு முக்கிய காலகட்டம்.
முதியோர்களின் ஆரோக்கியத்தை நிலைநிறுத்துவதற்கும் மற்றும் மேம்படுத்துவதற்கும் ஆரம்பகால குழந்தைப் பருவ கவனிப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, வாழ்க்கையில் முதல் 1000 நாட்களில் ஊட்டச்சத்து குறைபாடு Read More
தமிழ்நாட்டில் மாவட்ட அளவில் பல்துறை பொது சுகாதார குறியீடுகளைப் பயன்படுத்தி ஒரு ஒப்பீட்டு ஆய்வு
பாரம்பரியமாக நோய் தடுப்பு மருத்துவ நடைமுறையிலிருந்து மாறுபட்டு பொது சுகாதாரத்தை மேம்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கை என்பது மிகுந்த வீச்சுடன் செயல்படுத்த வேண்டிய ஒன்றாகும்; தண்ணீர், நலவாழ்வு, மற்றும் ஊட்டச்சத்து போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு அதற்கு ஒரு விரிவான அணுகுமுறை தேவைப்படுகிறது. Read More
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் அதிக அளவிலான பச்சிளம் குழந்தைகள் இறப்புக்கான காரணங்கள் கண்டறிதல்
கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் நடத்தப்பட்ட பச்சிளம் குழந்தைகள் இறப்பு குறித்த இந்த ஆய்வில், சமூக மற்றும் நடைமுறை காரணிகள் முக்கிய பங்கு வகிப்பது கண்டறியப்பட்டது. பொருளாதார காரணிகளை பயன்படுத்தி, விளைவுகளை ஆராய்வதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், பொது சுகாதார சேவைகள் Read More
இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை, வைட்டமின் டி நிலை மற்றும் தமிழகத்தின் கிராமப்புற குழந்தைகளின் நலவாழ்வு குறித்த விழிப்புணர்வு பற்றிய ஆய்வு
நீண்டகால கொள்கைகள் மற்றும் திட்டங்கள் பல இருந்த போதிலும், இன்றைய நிலையில் நாடெங்கிலும் 70 விழுக்காட்டுக்கும் அதிகமான இளம் குழந்தைகள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது அவர்களின் வளர்ச்சியில் மீள முடியாத தீங்கினை விளைவிக்கிறது. தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் நடத்தப்பட்ட Read More
வால்பாறையில் காடர் பழங்குடியினர் பற்றிய ஆய்வு
வால்பாறையில் உள்ள காடர் பழங்குடியினரின் சமூக பொருளாதாரம் குறித்த ஆய்வு, இம்மக்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலையை மதிப்பிட்டுள்ளது. இந்த ஆய்வு காடர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கல்வி மற்றும் பொருளாதாரம் தொடர்பான பதிவின் அடிப்படையில் குடும்ப அட்டைகளை Read More
முழுமையாக தாய்ப்பால் மட்டும் குடிக்கும் 3 முதல் 6 மாத குழந்தைகளின் வைட்டமின் டி நிலை மற்றும் பல்வேறு தாய் சேய் காரணிகளும் அதன் தொடர்பு பற்றிய ஒரு ஆய்வு அறிக்கை – தொடர் கண்காணிப்பு ஆய்வு
இந்த ஆய்வு 3 முதல் 6 மாத வயது வரை தாய்ப்பால் மட்டும் உட்கொண்ட குழந்தைகளின் வைட்டமின் D நிலை மற்றும் பல்வேறு காரணிகளுடன் அதன் தொடர்பை ஆராய்கிறது, குழந்தையின் ஆரோக்கியத்தின் முக்கியமான அம்சத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தாய்ப்பாலில் அங்கீகரிக்கப்பட்ட பல நன்மைகள் Read More
நுண்ணுயிரிகள் எதிர்ப்பிகள் பணி திட்டம்: மருத்துவமனைகளில் மருந்து - எதிர்ப்பு நோய்க்கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் சரியான பயன்பாட்டை அளவிடுவதற்கு ஒருங்கிணைந்த தலையீடுகள்
நுண்ணுயிரிகள் எதிர்ப்பிகள் பணி திட்டம், மருத்துவமனைகளில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் நியாயமான பயன்பாட்டை உறுதி செய்வதன் மூலம் மருந்து-எதிர்ப்பு நோய்க்கிருமிகளிடமிருந்து அதிகரித்து வரும் தொற்றுநோய்களின் அச்சுறுத்தலைச் சமாளிக்கிறது. நுண்ணுயிர் எதிர்ப்பிகள் 20 ஆம் நூற்றாண்டில் நலவாழ்வு Read More
"அங்கன்வாடி குழந்தைகளில் ஊட்டச்சத்து நிலை மற்றும் இரும்பு சத்து குறைவு இரத்தசோகை பரவல் மற்றும் இரும்புச் சத்துக்களின் தாக்கம்" பற்றிய ஆய்வு அறிக்கை
2015 இல் ஜூன் மற்றும் டிசம்பர் மாத இடையில் வடபழனி, சிம்ஸ் மருத்துவமனை அருகே நடத்தப்பட்ட ஆய்வில், எட்டு அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை மற்றும் இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை (IDA) பாதிப்பு ஆகியவற்றை மதிப்பீடு செய்தது. மதிப்பிடப்பட்ட 280 குழந்தைகளில், 29% பேர் IDA இன் Read More
குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் பிறப்பின் போது அறியப்படும் குறைபாடுகள் பதிவேடுகள் பற்றி ஆய்வறிக்கை
ஊனமுறுதலுக்கான காரணிகளை முன்கூட்டி கண்டறிதல் மற்றும் பிறப்பு பதிவில் பிறப்புக் குறைபாடுகள் தரவுகளை பதிவு செய்தல் பற்றிய திட்ட அறிக்கை முறையான தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்விற்கான தற்போதைய கண்காணிப்புத் திட்டத்தை நிறுவுகிறது. இந்த நிலையான அணுகுமுறை, பிறப்பு குறைபாடு அளவுகள், சுயவிவரங்கள், Read More
மாவட்டம் மற்றும் ICD குறியீடுகளைப் பயன்படுத்தி பிறக்கும் குழுந்தைகளின் தரவுகளில் ஏற்படும் முரண்பாடுகளை பகுப்பாய்வு செய்தல். 1389 பிரசவங்களில் 0.7% பிரசவங்களில் தரவு முரண்பாடுகள் இருந்தபோதிலும், பிறப்பு குறைபாடுகளின் முடுக்கப்பட்ட இலக்கின் போக்குத்தன்மை மற்றும் தலையீடுகள், மாற்றி அமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும் என்பதும், விகிதங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட விழிப்புணர்வின் அவசியத்தையும் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களிடையே ஃபோலிக் அமிலம் குறித்த கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.
கலந்தாய்வரங்கங்கள்
Public Health
Maternal and Child Health
Tribal Issues
Nutrition
Disabilities and Health
Elderly Healthcare
AYUSH and Alternative Medicine
Social Welfare and Development
நலவாழ்வு மற்றும் சமூக நலத் துறை மற்றும் அதன் பல்வேறு அம்சங்களை மையமாகக் கொண்ட பயிலரங்குகள் மற்றும் கருத்தரங்குகள் வளர்ந்து வரும் சிக்கல்கள், அவசரத் தலையீடுகள், புதிய கருப்பொருள்கள் மற்றும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள கருத்து பட்டறைகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. இந்த அமர்வுகளின் விவாதத்தின் போது வெளிப்படும் சிறந்த கருத்துக்கள், தரவுகள் மற்றும் பரிந்துரைகள் பின்னர் சம்பந்தப்பட்ட துறைகளுக்குத் தெரிவிக்கப்பட்டு, அவற்றின் மீதான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றன.
சுகாதாரம் மற்றும் சமூக நலக் குழுமம் மேற்கொண்ட சில கருத்து பட்டறைகள்:
தமிழ்நாட்டில் தாய் மற்றும் பச்சிளம் குழந்தை ஆரோக்கியம் தொடர்பான மேலாண்மை நடைமுறைகள் குறித்த கருத்துப் பட்டறை அறிக்கை
மகப்பேறு நலவாழ்வு என்பது கர்ப்ப கால ஆரோக்கியம், குழந்தை பிறப்பு நேர ஆரோக்கியம் மற்றும் குழந்தை பிறப்புக்கு பிந்தைய காலத்தில் பெண்களின் நல்வாழ்வு ஆகியவைகளை உள்ளடக்கியது. தாய்மை பொதுவாக ஒரு நேர்மறையான மகிழ்ச்சியான அனுபவமாக பார்க்கப்பட்டாலும், பல பெண்களுக்கு இது துன்பம் மற்றும் உடல் Read More
மாற்று / இயற்கை மருத்துவ முறை மூலம் வாழ்க்கை முறை நோய்களை நிர்வகிப்பதற்கான கருத்துப்பட்டறை அறிக்கை
கடந்த நூற்றாண்டில், பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் வர்த்தகத்தின் உலகமயமாக்கல் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமல்லாமல் அறிவியல் துறையில், குறிப்பாக மருத்துவத்துவத்தில் உலக அளவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும் போது, வாழ்க்கை Read More
மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்த பயிலரங்கம் - அறிக்கை
வயது வரம்பு இல்லாமால் அனைவரின் வாழ்விலும் நிலையான செல்வமாக விளங்குவது ஆரோக்கியம் மட்டுமே, வயது ஆக ஆக, போதிய சுகாதார பாதுகாப்பு அவசியமாகிறது. ஓய்வுபெறும் வயதை எட்டியதும், ஒரு நபரின் நிலையான வருமானம் நின்றுவிடுகிறது, மேலும் உடல்நலம் தொடர்பான செலவுகள் வயதானவர்களின் சேமிப்பைக் குறைக்கும். Read More
நலிந்த பிரிவினரின் நலன் குறித்த பயிலரங்கம் - முதியோர் பராமரிப்பு
மூப்படைதல் என்பது தவிர்க்க இயலாத ஒரு வாழ்வியல் நடைமுறையாகும், இது உலகளவில் ஒவ்வொரு மனிதனையும் பாதிக்கிறது. மக்கள்தொகையில் வயதானவர்களின் விகிதங்கள் நாட்டளவிலும் குடும்ப அளவிலும் தொலைநோக்கு தாக்கங்களைக் கொண்டுள்ளது. இந்த தாக்கம் பாரம்பரியமாக வளர்ந்த நாடுகளில் Read More
பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாடு குறித்த பட்டறை அறிக்கை
தமிழ்நாடு உழைப்பின் மிகுதியால் உயரிய நிலையில் வகைப்படுத்தப்படுகிறது. மாநிலத்தில் மிகவும் பற்றாக்குறையான வளம் இருப்பினும் திறமையான தொழிலாளர்கள் பங்களிப்பு சிறுப்புடையதாக உள்ளது. ஆனால் இந்த பற்றாக்குறை பொருளாதார வளர்ச்சியின் வேகத்தைத் தடுக்கிறது. மலைப்பாங்கான மற்றும் வனப்பகுதிகளில் வசிக்கும் Read More
சிறார் நீதி அமைப்பின் கீழ் உள்ள விடுதிகளில் உள்ள குழந்தைகளின் உளவியல் சிக்கல்கள் குறித்த பட்டறை அறிக்கை
குழந்தைகள் நல்ல, உகந்த சூழலில் வளர்க்கப்படும்போது அவர்கள் செழித்து வளர்கிறார்கள் என்று ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகிறது, இல்லையெனில் அவர்களின் உளவியல் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்படுகிறது. சிறார் நீதி அமைப்பு இல்லங்கள், மறுவாழ்வில் கவனம் செலுத்தி, குழந்தைகளுக்கு ஒரு ஒருங்கிணைந்த இடத்தை Read More
குழந்தைகளை ஒரு வரையறுக்கப்பட்ட கண்காணிப்பில் பரமரிப்பது குழுந்தைகளின் சீரான வளர்ச்சியின் தடைகளைத் தீர்ப்பதற்கும், அத்தகைய இல்லங்களில் குழந்தைகளின் உளவியல் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், மிகவும் உள்ளடக்கிய மற்றும் நெகிழ்வான அணுகுமுறையை அறிமுகப்படுத்துவது கட்டாயமாகும். நிர்வாகத்தின் நேர்த்தியான அமைப்பு மற்றும் அதன் வழி நேர்மறை சிந்தனையை ஊக்குவிக்க வேண்டும். இந்த குழந்தைகளின் மறுவாழ்வுக்காக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டம், எளிமையான அணுகுமுறை, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் ஆரோக்கியமான உடலில் ஆரோக்கியமான மனதை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நெகிழ்வுத்தன்மை, மற்றும் சமச்சீர் ஊட்டச்சத்து ஆகியவற்றை வலியுறுத்துவது மிகவும் முக்கியமானது. மேலும், இவ்வாய்வின் வழி, பரிந்துரைக்கப்பட்ட அணுகுமுறையை ஏற்றுக்கொள்வது, இந்த வீடுகளில் வசிக்கும் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் மனநிலையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் திறனைக்
அங்கன்வாடி மையங்களில் குழந்தைப் முன் பருவக் கல்வி குறித்த பயிலரங்க அறிக்கை
குழந்தை முன் பருவக் கல்வி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் திறன்களில் தோராயமாக 90% மூன்று வயதுக்கு முன்பே ஏற்படுகிறது. இந்த முக்கியமான காலகட்டத்தில், சிறப்பு கவனம் தேவை, சிறப்பு பார்வை, சமச்சீர் ஊட்டச்சத்து மற்றும் அறிவுசார் தூண்டுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. Read More
குழந்தைப் பருவத்தில், அரசாங்கத் தலையீடுகள் கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து உள்ளிட்ட சேவைகளின் விரிவான தொகுப்பை வழங்குவதில் கவனம் செலுத்துகின்றன. அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளுக்கு இடையே சரியான தொடர்பை ஏற்படுத்துவது தடையற்ற மாற்றத்தை உறுதி செய்ய அவசியமானது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ICDS) ஒரு முக்கிய திட்டமாக உள்ளது, இது ஊட்டச்சத்து, குழந்தை பருவ கல்வி, முன்பள்ளி பருவ பராமரிப்பு, சுகாதாரம், ஆதரவான சேவைகள் மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற சேவைகளுக்கு ஒரு ஒருங்கிணைந்த தளத்தை வழங்குகிறது. இந்த உலகளாவிய திட்டம் குழந்தைப் பருவக் கல்வியை சாதகமாக மாற்றியுள்ளது மேலும், அனைத்து வளர்ச்சித் தொகுதிகளிலும் உள்ள பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு பங்களித்துள்ளது. ஐசிடிஎஸ்-க்கு கூடுதலாக, இந்திய அரசின் முதன்மைத் திட்டமான சர்வ சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ) கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இடைநிற்றல் விகிதங்களைக் குறைத்தல் மற்றும் சேர்க்கை மற்றும் தக்கவைப்பு விகிதங்களை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, குழந்தைப் பருவக் கல்வியை வளர்ப்பதில் SSA முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வி கற்றலுக்கு அப்பால், குழந்தைகளிடம் நேர்மறையான மதிப்புகளை விதைப்பதிலும், அவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு பங்களிப்பதிலும் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது.
இந்திய மருத்துவ முறை மூலம் இரத்த சோகையை கட்டுப்படுத்துவது குறித்த பட்டறை அறிக்கை
குழந்தைகளின் ஊட்ட உணவு மற்றும் அதனால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இரத்த சோகை ஏற்படுகிறது, மேலும் இரத்த சோகையின் காரணமாக நோய்வாய்ப்படுவதும் சில நேரங்களில் இறப்பும் மிகவும் அதிகமாக உள்ளது. இது தவிர, இரத்த சோகையால், வருமானம் ஈட்டும் திறன், வாழ்நாள், ஆயுட்காலம் மற்றும் தனிநபர்களுக்கான Read More
நரம்பியல் - தசை கோளாறுகளுக்கான நீண்ட கால தீர்வுகளின் கருத்தரங்க அறிக்கை
ஒருமுகப்படுத்தப்பட்ட மூலதனம், மேம்பட்ட மனித வளம் மற்றும் வேகமான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம் விரைவான பொருளாதார வளர்ச்சி நிகழ்ந்து வருகிறது. இந்த மூன்று கூறுகளில், இரண்டாவது, அதாவது மனித வள மேம்பாடு, இது தொழிலாளர் உற்பத்தித்திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நேர்மறையாக மனிதவளம் மீதமாவதை தூண்டுகிறது. Read More
ஆரோக்கியமான குழந்தைகள் அவர்களின் உற்பத்தி பங்களிப்பு வயதின் வளர்ச்சி மற்றும் செயல்திறனிற்கு ஏற்ப குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறார்கள். தசைநார் சிதைவு கோளாறு என்பது குழந்தைகளின் உடல் குறைபாட்டை ஏற்படுத்தும் தீவீர மற்றும் பொதுவாக காணப்படும் நோய்களில் ஒன்றாகும். ஒரு குழந்தையின் வளர்ச்சியில் தடை ஏற்பட்டால், மனித வளங்களின் ஆற்றல் மற்றும் வீரியத்தின் நோக்கமே தோற்கடிக்கப்படும், மேலும் உழைப்பின் பங்களிப்புகள் ஒரு சிறிய விகிதத்தில் குறையும். இறுதியில், ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கங்களும் அதன் குறிக்கோள்களும் நிறைவேறுவதில்லை. தசைச் சிதைவு, மரபணுக் கோளாறால் ஏற்படுவதால், இந்தப் பிரச்சனையை ஒரு முழுமையான அணுகுமுறையுடன் சமாளிக்க அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும். இந்த தீராத நோய்க்கான நடைமுறை தீர்வு, தசைக் கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டறியும் உத்தியில் உள்ளது. இதற்கான முனைப்பு குழந்தைகளின் சுகாதார நிலையை முழுமையாக படம்பிடிப்பதை உள்ளடக்கியது.
நலவாழ்வு சார்ந்த சவால்களை சமூக குழுக்களின் பங்களிப்புடன் நிவர்த்தி செய்தல் தொடர்பான கருத்து பட்டறை
ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவது பொருளாதாரத்தில் நீடித்த நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். பொருளாதார வளர்ச்சியின் பின்னணியில் நல்ல ஆரோக்கியமான சமூகம் மிகவும் அவசியமானது, ஏனெனில் இது தொழிலாளர் உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டும் அடுத்தடுத்த Read More
சுய உதவிக் குழுக்கள் (SHGs) மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் (NGOக்கள்) ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களைத் தடுப்பதில் கவனம் செலுத்த ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த கருத்து பட்டறையில் சுகாதாரப் பாதுகாப்பு வழங்குதல் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல் ஆகிய அம்சங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
தற்பொழுது மேற்கொள்ளப்படும் ஆய்வு பணிகள்
Current Studies
- தமிழ்நாட்டில் “மக்களைத் தேடி மருத்துவம்” என்ற திட்டத்தின் கீழ் பல்கட்ட தொற்றா நோய் பரவல் பராமரிப்பு – ஒரு இடை மதிப்பீடு ஆய்வு.
- தமிழ்நாட்டில், பிறந்த குழந்தைகளின் வளர்ச்சியில் முதல் 1000 நாட்களில் ஒருங்கிணைவு பற்றிய குறிப்பிட்ட இலக்குடன், ஊட்டச்சத்து குறைபாடு பற்றிய ஒரு மேம்பட்ட ஆய்வு,
- பழங்குடியின சமூகங்களின் சமூக-பொருளாதார மேம்பாடு – பழங்குடியினர் பகுதிகளில் அரசாங்கத் திட்டங்களின் தாக்கம் மற்றும் அத்திட்டங்கள் பழங்குடியினரை சென்றடைதல் குறித்த ஆய்வு
- ஊட்டச்சத்து குறைபாட்டால் துரிதமாக (SAM) பாதிக்கப்பட்ட மற்றும் ஓரளவு பாதிப்படைந்த ( MAM )குழந்தைகளின் சமூக-பொருளாதார பின்னணி
- வட்டாரம் மற்றும் வட்டாரம் சார்ந்த அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் பற்றிய ஒரு ஆய்வு
- ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இந்திய பாரம்பரிய சித்தா மருத்துவமனைகளின் வழி உடல் நலனுக்கான செயல்திறன் ஆய்வு