தொழில் மின்சாரம் போக்குவரத்து

மாறிவரும் பொருளாதாரத்திற்கான தொழில்மயமாக்கல் கொள்கை (வரைவு)

2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதை நோக்கமாகக் கொண்ட மாறிவரும் பொருளாதாரத்திற்கான தொழில்மயமாக்கல் கொள்கை, ஆறு கொள்கை ஆவணங்களை உள்ளடிக்கியது. திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் எம். விஜயபாஸ்கர், திருமதி மல்லிகா சீனிவாசன் மற்றும் டாக்டர் T.R.B ராஜா (தற்போது மாண்புமிகு. தொழில்துறை அமைச்சர்) ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்ட  இந்த கொள்கை ஆவணங்கள் மாண்புமிகு முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டன. (2022).

இதனைத் தொடர்ந்து, இப்பொருள் சார்ந்த துறைகள், கொள்கை ஆவணங்களில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் கொள்கைகளை வெளியிட்டுள்ளன மற்றும் சில துறைகள் வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளன.

 

ஆண்டு: 2022

துறைகள்: குறு. சிறு, (ம) நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்; தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகம்; கைத்திறன், துணிநூல் (ம) கதர்; சுற்றுலா, பண்பாடு (ம) சமய அறநிலையத்துறை

துறை வாரியான வழிகாட்டுதல்

குறு. சிறு, (ம) நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் 

டிஜிட்டல் அடையாள அட்டையை உருவாக்குவதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை முறைப்படுத்தி ஊக்குவிப்பு அணுகலை ஏதுவாக்கல், கடன் வழங்குபவர்களுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன தரவுகளை அணுக டிஜிட்டல் தளத்தை நிறுவுதல், இந்தியாவின் முதன்மையான டிஜிட்டல் தொழிலாளர் பரிமாற்ற தளத்தை உருவாக்குதல், ஊக்கத்தொகை மற்றும் சேவைகள் விழிப்புணர்வுக்காக அனைத்து தகவல்களும் பெறத்தக்க  ஒரு தகவல் தளத்தை உருவாக்குதல், குறு நிறுவன ஆதரவுக்காக 30+ கிளஸ்டர்களில் அடிமட்ட பிரச்சாரங்களைத் தொடங்குதல் மற்றும் விரிவான தொழில் ஆதரவுக்காக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு நிறுவனத்தை (TNMTIPB) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வசதியாக்கல் நிறுவனமாக (FaMeTN) மாற்ற பரிசீலனை செய்தல் (தற்போது மாற்றப்பட்டுவிட்டது) ஆகியன முக்கிய பரிந்துரைகளில் அடங்கும். இப்பரிந்துரைகளின் அடிப்படையில், குறு. சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை 2023-ஐ வெளியிட்டுள்ளது இணைப்பு

மின் வாகனம்

தற்போதுள்ள சூழலமைப்புகளை மேம்படுத்தி, மின்சாரவாகனம் போன்ற வளர்ந்து வரும் துறைகளுக்கேற்ப சென்னை-ஓசூர்-கோயம்புத்தூர் பகுதியில் உயர்-தொழில்நுட்ப வழித்தடத்தை நிறுவுவதல் மாநிலத் திட்டக்குழுவின் முக்கிய  பரிந்துரைகளில் ஒன்றாகும். இந்த முன்மொழிவு, தொழிலக-கல்விநிறுவன கூட்டுதலைமையிலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் மூலம் இந்தியாவின் முன்னணி மின்சார வாகன சூழலமைப்பை நிறுவுவதையும், மின் வாகனத் தொழில்நுட்பத்தில் திறன்பெற்ற மனிதவளத்தை உருவாக்குவதையும் வலியுறுத்துகிறது.

இப்பரிந்துரைகளின் அடிப்படையில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை. தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை 2023-ஐ வெளியிட்டுள்ளது இணைப்பு 

தொழில் 4.0 

ஒரு ஒருங்கிணைந்த அதிநவீன தொழில் வழித்தடத்தை உருவாக்குதல் மற்றும் திருப்பெரும்புதுரில் உள்ள மின்னணு உற்பத்தி சேவைகள் (EMS), குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொகுப்பினை புத்துயிரூட்டல் மாநிலத் திட்டக்குழுவின் முக்கிய பரிந்துரையாகும்.. இதனைத் தவிர, மின்னணு உற்பத்தி நிறுவன தொகுப்பு உருவாக்கத்தை விரைவுப்படுத்தல் மற்றும் கூட்டு ஆராய்ச்சி (ம) வளர்ச்சிக்கான தொழில் 4.0 புத்தாக்க குவிமையம் உருவாக்குவதன் மூலம் தலைச்சிறந்த ஆராய்ச்சி (ம) வளர்ச்சிக்கான சுழலமைப்பை வளர்த்தல் ஆகியனவும் பரிந்துரைகளில் அடங்கும்.  தமிழ்நாட்டை இந்தியாவின் I 4.0 திறன் தலைநகராக நிலைநிறுத்துவதற்கு, தொழில்-கல்வியாளர்கள் ஒருங்கிணைப்பு மூலம் திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியளிப்பது மற்றும் திட்டமிடுவதும் இதில் அடங்கும்.

கைத்தறி

மாநிலத் திட்டக்குழுவின் முக்கிய பரிந்துரைகளாவன, 10 முதல் 15 எண்ணிக்கையிலான கைத்தறிப் பொருட்களை உயர்மதிப்பு பொருட்களாக உருவாக்கிட வழிவகை செய்தல்; கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தை ஒரு முன்னோடி நிறுவனமாக அடையாளப்படுத்திட கூட்டு வணிகம் மற்றும் அடையாள மாதிரி வணிக உத்தியை உருவாக்குதல் ஆகியனவாகும்.  மேலும், நேர்மையான முறையில் செயல்பட்டுவரும் கைத்தறி நிறுவனங்களை முறைப்படுத்தல் மற்றும் கடைக்கோடி கைவினைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்தலையும் பரிந்துரைகள் வலியுறுத்துகின்றன.இப்பரிந்துரைகளின் அடிப்படையில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை, கைத்தறி கொள்கையை விரைவில் வெளியிடவுள்ளது.

 

உற்பத்தி திறனை மேம்படுத்த, பத்திற்கும் மேற்பட்ட தொழில் தொகுப்பு மையங்களை, திட்டங்கள் மற்றும் பொது வசதிகள் மூலம் புத்துயிரூட்டல் மாநிலத் திட்டக்குழுவின் முக்கிய பரிந்துரைகளுள் ஒன்றாகும்., மேலும், நிலைத்தன்மையுடன்கூடிய நெறிமுறைக்குட்பட்ட 4-5 மிகப்பெரிய ஜவுளிப் பூங்காக்களை அமைத்தல்;  பெட்ரோலிய வேதிம வளாகத்தில், செயற்கையிழை தயாரிப்பு தொகுப்பு மையம் நிறுவி ஆராய்ச்சி (ம) வளர்ச்சி மேம்படுத்தல் ஆகியனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்ப ஜவுளிகள் துறையில் முதலீடுகளை ஆதரிக்கும் வகையில்  சிறப்புத்தரமான சூழலை உருவாக்குவதையும்; திறன்பெற்ற தொழிலாளர்கள் கிடைப்பதை உறுதி செய்ய தொழிலிணக்க திறன் மேம்பாட்டு பயிற்சியளித்தலையும் மாதிகுவின் முன்மொழிவுகள் வலியுறுத்துகின்றன.

இப்பரிந்துரைகளின் அடிப்படையில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை,  துணிநூல் கொள்கையை விரைவில் வெளியிடவுள்ளது

மேலும், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையானது,  தொழில்நுட்ப ஜவுளிகள், மறுசுழற்சி தயாரிப்புகளுக்கான செயற்கையிழை நூல், செயற்கையிழை துணிகள் (ம) ஆடைகள் தயாரிப்புக்கான சிறப்புத்திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது → பார்க்க அரசாணை நிலை எண். 70, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை நாள் 18,03,2023. இணைப்பு

சுற்றுலா 

விருந்தோம்பலை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலாத்துறையில் வளர்ச்சி மற்றும் முதலீடுகளுக்காக தொழில்துறை அந்தஸ்து வழங்குதல்; புதிய கருப்பொருள் சார்ந்த சுற்றுலா தடங்களை உருவாக்குவதன் மூலம் இலக்குடன்கூடிய  சந்தைப்படுத்தல், உத்திசார் கூட்டுவணிகம்; மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் மேம்பட்ட விமான

இணைப்பை ஏற்படுத்தல் ஆகியன மாநிலத் திட்டக்குழுவின் முக்கிய பரிந்துரைகளாகும்.  இந்தியாவின் முன்னணி விமான நிலைய குவிமையமாக தமிழ்நாட்டினை நிலைநிறுத்த விமான நிலைய வசதிகளை மேம்படுத்துவதும் இந்தத் திட்டத்தில் அடங்கும்.  மேலும், சுற்றுலாவுக்கான இந்தியாவின் முதல் டிஜிட்டல் மற்றும் தரவு பகுப்பாய்வு மையத்தை அமைக்கவும், தனிப்பட்ட இலக்கு மற்றும் அரசாங்க நடவடிக்கைகளுக்கு தரவு அடிப்படையிலான முடிவெடுத்தலையும் இது பரிந்துரைக்கிறது. இந்த முன்மொழிவு சுற்றுலாத் திட்ட நிதி ஒதுக்கீட்டினை அதிகரிக்கவும், மாற்று நிதியைப் பயன்படுத்தி சுற்றுலா வளர்ச்சியை. ஊக்குவிக்கவும் பரிந்துரைக்கிறது..

இப்பரிந்துரைகளின் அடிப்படையில், சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை. தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023-ஐ வெளியிட்டுள்ளது இணைப்பு   

 

ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் குறு சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) மின் வாகனம் தொழில் 4.0 கைத்தறி துணிநூல் சுற்றுலா புத்தொழில் (ம) புத்தாக்க கொள்கை சுற்றுலாக் கொள்கை தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழு